azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

If the I-consciousness in you, produces the pride “I know all”, a fall is inevitable; the delusion causes death. The secret of salvation lies in the realisation of this danger. Rebirth is inevitable if this danger is not averted. Immerse yourself in spiritual practices, then the world and its worries will not affect you. It is only when you are far from this truth that you suffer, feel pain, and experience travail. At a distance from the bazaar, one hears only a huge indistinct uproar. But as you approach it, you can clearly distinguish the separate bargainings. So too, till you get to know the reality of the Supreme, you are overpowered and stunned by the uproar of the world; but once you enter deep into the realm of spiritual endeavour, everything becomes clear and the knowledge of the reality awakens within you. Until then, you will swirl in the meaningless noise of argumentation, disputation, and exhibitionist flamboyance.(Prema Vahini, Ch 16.)
உங்களுள் உள்ள ''நான்'' என்ற உணர்வு, '' நான் அனைத்தும் அறிவேன் '' என்ற அகந்தையைத் தோற்றுவிக்குமானால், ஒரு வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகி விடுகிறது; இந்த மாயை, மரணத்தை ஏற்படுத்துகிறது. முக்தி அடைவதன் இரகசியம் இந்த அபாயத்தை உணர்வதில் தான் இருக்கிறது. இந்த அபாயத்தைத் தடுக்கவில்லை என்றால்,மறு பிறவி தவிர்க்க முடியாததே. ஆன்மீக சாதனைகளில் உங்களையே ஆழ்த்திக் கொள்ளுங்கள், பின்னர் இந்த உலகமும் அதன் கவலைகளும் உங்களை பாதிக்காது.இந்த உண்மையிலிருந்து நீங்கள் விலகிச் செல்லும் போதுதான், நீங்கள் பாதிக்கப் பட்டு, வலியை உணர்ந்து, வேதனையை அனுபவிக்கிறீர்கள்.கடைத் தெருவிலிருந்து தொலைவில் இருக்கும் போது, ஒருவர் மிகப் பெரிய புரிந்து கொள்ள முடியாத சத்தத்தை மட்டுமே கேட்கிறார். ஆனால் நீங்கள் அதனருகில் செல்லும் போது, உங்களால் தனித் தனியான பேரங்களை இனம் கண்டு கொள்ள முடிகிறது. அதைப் போலவே, நீங்கள் பரப்ரம்மத்தின் உண்மையைத் தெரிந்து கொள்ளும் வரை,இந்த உலகின் கூச்சல் குழப்பங்கள் உங்களை அடக்கி, பிரமிப்படையச் செய்கின்றன; ஆனால் ஆன்மீக சாதனை சாம்ராஜ்யத்தில் நீங்கள் ஆழ்ந்து விட்டால், அனைத்தும் தெளிவாகி, பரப்பிரம்மத்தைப் பற்றிய ஞானம் உங்களுள் விழிப்படைந்து விடுகிறது. அது வரையில் நீங்கள் வாத விவாதங்கள்,சர்ச்சைகள் மற்றும் படாடோபங்களின் அர்த்தமற்ற கூச்சல்களில் சுழன்று கொண்டு தான் இருப்பீர்கள்.