azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Love is God, love is Nature, love is life and love is the true human value. It is on the basis of the principle of love that sages declared:Loka samastha sukhino bhavantu(May the whole world be happy!). Love even the worst of your enemies. Sanctify every day by cultivating sacred thoughts and broad feelings. Today, humanity is stricken with fear and restlessness. Courage and strength are on the decline, because you have unsacred thoughts and wicked feelings. Your enemies are not outside. Your bad thoughts are your worst enemies and thoughts based on Truth are your best friends. You must makeSath,the eternal Truth, as your best friend. Worldly friends and enemies change with passage of time, but God is your true and eternal friend. This friend is always with you, in you, around you, above you, below you and protects you just as the eyelid protects the eye. (Divine Discourse, 18 Mar 1999)
ப்ரேமையே இறைவன், ப்ரேமையே இயற்கை, ப்ரேமையே வாழ்க்கை, ப்ரேமையே உண்மையான மனிதப்பண்பு.இந்த ப்ரேம தத்துவத்தின் அடிப்படையில் தான் முனிவர்கள், லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸுகினோ பவந்து (அகிலமனைத்தும் இன்புற்று இருக்கட்டும்!) எனப் பறைசாற்றினார்கள். உங்களது மிகக் கொடிய பகைவரையும் கூட நேசியுங்கள்.ஒவ்வொரு நாளையும் புனிதமான எண்ணங்களையும், விசாலமான உணர்வுகளையும் வளர்த்துக் கொள்வதன் மூலம் பரிசுத்தமாக்குங்கள்.இன்று மனிதகுலம் அச்சத்தினாலும், அமைதியின்றியும் தவிக்கின்றது.தைரியமும்,வலிமையும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன;ஏனெனில் நீங்கள் புனிதமற்ற எண்ணங்களையும்,தீய உணர்வுகளையும் கொண்டுள்ளீர்கள். உங்களது பகைவர்கள் வெளியில் இல்லை. உங்களது தீய எண்ணங்களே உங்களது மிகவும் மோசமான பகைவர்கள்; சத்தியத்தை ஆதாரமாகக் கொண்ட எண்ணங்களே உங்களது மிகச் சிறந்த நண்பர்கள்.நீங்கள் என்றும் நிலைத்திருக்கும் ''ஸத்'' என்ற சத்தியத்தை உங்களது தலை சிறந்த நண்பனாகக் கொள்ள வேண்டும். உலகியலான நண்பர்களும், பகைவர்களும் காலப் போக்கில் மாறிக் கொண்டே இருப்பார்கள், ஆனால் இறைவன் ஒருவனே உங்களது உண்மையான மற்றும் நிலையான நண்பன்.இந்த நண்பன் எப்போதும் உங்களுடனும்,உங்களுள்ளும்,உங்களைச் சுற்றியும், உங்களுக்கு மேலும், உங்களுக்குக் கீழும் இருந்து , கண்களை இமைகள் காப்பதைப் போலக் காத்திடுகிறான்.