azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 11 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 11 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The Divine is the base, and also the superstructure. The beads are many, but the interconnecting, integrating string of the rosary is one. So also for the entire world of living beings; God, the permanent, omnipresentParabrahman, is the base. The scriptures proclaim, “He who realises Divine verily becomes Divine(Brahmavid Brahmaiva Bhavathi)”. The bubble born of water floats in it and bursts to become one with it. All the visible objective worlds are like bubbles emanating from the vast ocean of Divinity,Brahman.They are on the water and are sustained by water. How else can they arise and exist? Finally, they merge and disappear in water itself. For their origination, subsistence, and mergence, they depend only on water. Water is the basis; bubbles are delusive forms of the same imposed on it. (Sutra Vahini, Ch 2.)
தெய்வீகமே அஸ்திவாரமும்,கட்டிடமும் ஆகும்.மணிகள் பலவானாலும், அவற்றை ஒன்றாக இணைத்து ஜபமாலையாக ஆக்கும் கயிறு ஒன்றுதான். அதைப் போலவே,ஜீவராசிகள் அடங்கிய இந்த உலகனைத்திற்கும் நிரந்தரமான, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரப்ரம்மமான இறைவனே ஆதாரம். மறைநூல்கள், ''தெய்வீகத்தை உணருபவன் தெய்வீகமாகவே ஆகி விடுகிறான்''( ப்ரம்மவித் ப்ரம்மைவ பவதி) என்று பறைசாற்றுகின்றன.நீரில் தோன்றும் நீர்குமிழ்,நீரிலேயே மிதந்து, பின்னர் உடைந்து நீரோடு நீராகக் கலந்து விடுகிறது. இந்த உலகில் கண்களுக்குப் புலப்படும் அனைத்தும், பரப்பிரம்மன் என்ற மஹாசாகரத்தில் இருந்து தோன்றிய நீர்குமிழிகள் போன்றவையே.அவை நீரின் மேலேயே இருந்து, நீராலேயே பேணிக் காக்கப் படுகின்றன.வேறு எவ்வாறு அவை எழுந்து, நிலைத்து இருக்க முடியும்? இறுதியில் அவை நீரோடு ஒன்றரக் கலந்து மறைந்து விடுகின்றன.அவைகள் உருவாவதற்கும்,பிழைப்பதற்கும் பின்னர், ஒன்றரக் கலப்பதற்கும் நீரையே சார்ந்திருக்கின்றன.நீரே அடிப்படை ஆதாரம்; நீர்க்குமிழிகள்,அதன் மீது சுமத்தப் பட்டுள்ள மாயையின் ரூபங்களே.