azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

When you perform an activity(kriya)as an offering to the Lord, your own good, what is good for others, and the highest good(swartha, parartha,andparamaartha)all merge! First, you and I become we. Next we and He becomes One. The individual soul, the ‘I’(jiva)should accomplish identity first with the creation (prakriti) and then with the Supreme Divine (Paramatma). This indeed is the significance of themantra Om Tat Sat(which connects the identity of the individual with the UniversalBrahman).‘He’ and ‘I’ are always there; the spiritual practice(sadhana)is always there too. Just as the sun is inseparable and is never apart from its rays, under no circumstances should any aspirant part with one’ssadhana.It is only then they can be said to be one with Om. (Prema Vahini.)
நீங்கள் ஒரு காரியத்தை இறையார்ப்பணமாகச் செய்யும் போது, உங்களது சொந்த நலன், பிறர் நலன் மற்றும் தலை சிறந்த நலன் (ஸ்வார்த்த,பரார்த்த, பரமார்த்த) என்ற அனைத்தும் இணைந்து விடுகின்றன! முதலில் '' நானும்'', ''நீயும் '' சேர்ந்து ''நாம்'' ஆகி விடுகிறது. பின்னர் '' நாமும்'', '' அவனும் (இறைவன்)'' சேர்ந்து ஒன்றாகி விடுகின்றன.தனியான '' நான் '' என்ற ஜீவன் முதலில் தன்னை படைப்புடனும்( சிருஷ்டி), பின்னர் பரமாத்மாவுடனும் இனம் கண்டு கொள்ள வேண்டும். இதுவே '' ௐ தத்ஸத் '' (தனி மனிதனை பரமாத்மாவுடன் இணைக்கும்) என்ற மந்திரத்தின் முக்கியத்துவம் ஆகும். '' அவனும் (இறைவன்)'', '' நானும்( தனி மனிதன்)'' எப்போதும் இருக்கத் தான் செய்கின்றன; ஆன்மீக சாதனையும் கூட எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. எவ்வாறு சூரியனை ,அதனது கிரணங்களிலிருந்து விலக்கிப் பிரித்துப் பார்க்க முடியாதோ,அவ்வாறே, எந்த சூழ்நிலையிலும் ஆன்மீக சாதகன் தனது சாதனையை விட்டு விடக் கூடாது. அவ்வாறு இருந்தால் மட்டுமே, ஒருவர் ௐ எனும் பிரணவத்துடன் ஒன்றியிருப்பதாகக் கூற இயலும்.