azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

People may have performed a variety of Vedic rites and sacrifices; they might even expound the contents of vedas and scriptures; they may be endowed with prosperity, own vast wealth and heaps of grain. But without moral character, they cannot earn a place in the Kingdom of God. Virtues are the most effective means for purifying the inner consciousness, for they prompt the person to discover what to do and how to do it. Only those who have earned good destiny can claim their excellence in discrimination. Adherence to virtues and discrimination is the raft that will ferry you across the ocean of flux and fear(bhava sagara).The person of virtues is automatically granted a place in the Kingdom of the Liberated. Whatever residual activity the virtuous person is engaged in, the impact of that activity will not impinge them. They will merge inBrahman,the embodiment of Supreme Bliss. (Sutra Vahini, Ch 1)
மனிதர்கள் பல விதமான வைதீக சடங்குகளையும்,யாகங்களையும் செய்திருக்கலாம்; அவர்கள் வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களில் உள்ளவற்றைப் பற்றி சொற்பொழிவுகள் கூட ஆற்றி இருக்கலாம்; அவர்களுக்கு செல்வச் செழிப்பும், சொந்தமான பரந்த சொத்துக்கள் மற்றும் தானியக் களஞ்சியங்களும் இருக்கலாம். ஆனால், நல்லொழுக்கம் இல்லாமல் அவர்களால் இறைவனது சாம்ராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பெற முடியாது. நல்லொழுக்கங்களே ஆத்ம சுத்தியை அளிக்க வல்ல தலைசிறந்த திறன் கொண்ட முறையாகும்; ஏனெனில் அவையே ஒருவரை என்ன செய்ய வேண்டும்,எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க உந்துகின்றன.நல்ல விதியைப் பெற்றவர்களே,பகுத்தறிவில் தங்களுக்கு உள்ள மேன்மையை பறைசாற்றிக் கொள்ள முடியும்.நற்குணங்களும், பகுத்தறிவுமே, பவசாகரம் என்ற வாழ்க்கைக் கடலை நீங்கள் கடப்பதற்குத் தேவையான தோணியாகும். நற்குணங்கள் கொண்ட ஒருவருக்கு இயல்பாகவே மோக்ஷ சாம்ராஜ்யத்தில் ஒரு இடம் அளிக்கப் படும். நற்குணசீலரான ஒருவர் எந்தப் பணியை ஆற்றிக் கண்டிருந்தாலும், அவற்றின் பலன்கள் அவரை பாதிக்காது. அவர்கள் பரமானந்த ஸ்வரூபமான பரப்பிரம்மத்தில் ஒன்றரக் கலந்து விடுவார்கள்.