azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

A matchstick produces fire. Where is the fire? Is it in the matchstick or the matchbox? Fire is latent in both and it is ignited when the stick and box come in contact. Similarly effulgence latent in the heart and the mind emerges as Divinity when the heart and the mind act in unison. Just as the same fire is latent in the matchbox and matchstick, the effulgence encased in the mind and the heart is the same. If the matchstick is dipped in water, no fire emanates from it, as the matchstick loses its capacity to aflame. Similarly, the human mind sunken in materialistic desires, loses its capacity to radiate the Divine Atmic splendour. When the matchstick is dried in the sun, it regains its original capacity. Similarly, the human mind steeped in sensual pleasures, regains its original potency and radiates divine effulgence when it is dried in the sun of detachment(Vairagya). (Summer Showers in Brindavan 1993, Ch 6.)
ஒரு தீக்குச்சி நெருப்பை உண்டாக்குகிறது. நெருப்பு எங்கிருந்தது? தீக்குச்சியிலா அல்லது தீப்பெட்டியிலா? நெருப்பு இரண்டிலும் உள்ளுறைந்திருக்கிறது; தீக்குச்சியும், தீப்பெட்டியும் ஒன்றை ஒன்றை தொடும்போது அது பற்றிக் கொள்கிறது.அதைப் போலவே,இதயம் மற்றும் மனத்தில் உள்ளுறைந்து இருக்கும் ஒளியும் ( காந்தி) ,இந்த இரண்டும் இணைந்து செயலாற்றும் போது,தெய்வீகமாக வெளிப்படுகிறது. எவ்வாறு தீக்குச்சியிலும், தீப்பெட்டியிலும் உள்ளுறைந்து இருக்கும் நெருப்பு ஒன்றோ, அதே போல இதயத்திலும், மனதிலும் உள்ளுறைந்திருக்கும் ஒளியும் ஒன்றே. தீக்குச்சியை தண்ணீரில் போட்டு விட்டால்,அதிலிருந்து நெருப்பு உண்டாகாது, ஏனெனில் அது பற்றிக் கொள்ளும் திறனை இழந்து விடுகிறது. அதைப் போலவே உலகியலான ஆசைகளில் மூழ்கிக் கிடக்கும் மனித மனமும் தெய்வீக பரமாத்மாவின் காந்தியுடன் பிரகாசிக்கும் திறனை இழந்து விடுகிறது.தீக்குச்சியை சூரிய வெளிச்சத்தில் காய வைத்து விட்டால், அது மறுபடியும் தனது முந்தைய திறனைத் திரும்பப் பெற்று விடுகிறது.அதைப் போலவே, புலனின்பங்களில் ஊறிப்போயிருக்கும் மனித மனம், வைராக்யம் என்ற சூரிய வெளிச்சத்தில் உலர்த்தப் படும் போது, தனது சுயமான சக்தியைத் திரும்பப் பெற்று தெய்வீக காந்தியுடன் பிரகாசிக்கும்.