azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

A piece ofmysorepaak(an Indian delicacy made of gram flour) has sweetness, weight, and shape; the three cannot be separated from the other. Each little part of it has all these three aspects. When it is placed on the tongue, taste is recognised, weight is lessened, and shape is modified - all at the same time. So too, the individual soul(jiva),the Atma, and the Supreme Lord(Parameswara)are not separate; they are one and the same. “I am the worshiper. The world is the offering. God is the Master who is worshiped.” Hold this vision high before the mind’s eye every day and lead your life accordingly. Then your life is one long unbroken service to the Lord. Over time, the feeling of I and You will soon disappear; all trace of self will be destroyed. Life then transmutes itself into a veritable devotion to the Lord(Hariparayana). (Prema Vahini.)
ஒரு மைசூர்பாக்கின் துண்டை எடுத்துக் கொண்டால், அதற்கு இனிப்பு, எடை மற்றும் ரூபம் இருக்கிறது; இந்த மூன்றிலும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது. அதன் ஒவ்வொரு சிறு பாகத்திற்கும் இந்த மூன்று அம்சங்களும் இருக்கும்.அதை நாவில் வைத்தவுடன்,சுவை உணரப்படுகிறது, எடை குறைகிறது,ரூபம் மாறுகிறது- அனைத்தும் ஒரே சமயத்தில்.அதைப் போலவே, ஜீவன்,ஆத்மா மற்றும் பரமாத்மா (பரமேஸ்வரன்) வெவ்வேறல்ல; அவை அனைத்தும் ஒன்றே. '' நான் பக்தன்.இந்த உலகே நைவேத்யம். இறைவனே வழிபடப்படும் தலைவன்''.இந்த திருஷ்ட்டியை (நோக்கை), உங்களது மனக்கண்களுக்கு முன் ஒவ்வொரு நாளும் உயர்த்தி வைத்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கையை அவ்வாறே நடத்துங்கள்.பின் உங்களது வாழ்க்கையே இறைவனுக்கு ஆற்றும் ஒரு நீண்ட இடையறாத சேவையாகி விடுகிறது. காலப் போக்கில் ''நான்'','' நீ'' என்ற உணர்வுகள் விரைவில் மறைந்து விடும்; தான் (அஹங்காரம் ) என்பது சுவடு கூட இல்லாமல் அழிக்கப் பட்டு விடும். வாழ்க்கையே பின்னர், ஒரு இறை நாமஸ்ரணையாக ( ஹரி பாராயணம் ) உருமாறி விடும்.