azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

We must clearly understand the meaning of ‘death’ and ‘immortality’. We regard death as synonymous with all kinds of strength in the body being lost. In other words, death is the ebbing away of the life force from the body. If the life force remains in the body forever, we regard that situation as immortality. This is incorrect. To be able to completely identify oneself with the aspect of God and completely forget the aspect of the body is true immortality. If at all times we are totally immersed only in the thought of the body and its comforts, and forget the aspect ofAtma,that is death. It is only when we are able to clearly recognise the connection between birth and death that the sacred desire for securing immortality will sprout in us. There is birth and death for the body, but there is no birth or death for theAtma.To be able to understand this eternity of theAtmais the real meaning of attaining immortality. (Summer Showers in Brindavan 1974, Part 2, Ch 13.)
நாம், ''இறப்பு '' மற்றும் '' அமரத்துவம்'' என்பவற்றின் அர்த்தத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.நாம் இறப்பை,உடலில் உள்ள அனைத்து சக்திகளையும் இழப்பதற்கு ஒப்பிடுகிறோம். அதாவது, இறப்பு என்பது உடலிலிருந்து ப்ராண சக்தி சென்று விடுவதாகும். உடலில் ப்ராண சக்தி என்றென்றும் இருக்குமானால், அந்த நிலையை அமரத்துவம் என நாம் கருதுகிறோம். இது தவறானது. இறைத் தன்மையுடன் தன்னை முழுமையாக இனம் கண்டு கொண்டு, உடல் தன்மையை முழுமையாக மறந்து விடுவதே உண்மையான அமரத்துவம்.எல்லாக் காலங்களிலும்,உடல் மற்றும் அதன் சௌகரியங்களின் எண்ணங்களில் மட்டுமே முழுமையாக நாம் மூழ்கி ஆத்மாவை அடியோடு மறந்து விட்டோம் என்றால் அதுவே இறப்பாகும். பிறப்பு,இறப்பிற்கு இடையே உள்ள சம்பந்தத்தைத் தெளிவாக நாம் உணர்ந்து கொண்டால் தான் அமரத்துவத்தை அடைய வேண்டும் என்ற புனித வேட்கை நம்முள் துளிர் விடும். பிறப்பும் இறப்பும் உடலுக்கே ,ஆனால் பிறப்போ,இறப்போ ஆத்மாவிற்கு இல்லை.ஆத்மாவின் நிரந்தரத்தைப் புரிந்து கொள்வதே, அமரத்துவத்தை அடைவது என்பதின் உண்மையான அர்த்தமாகும்.