azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

If your minds revel in external objects and in purposeless observation and criticism of the outside world, how then can it be trained to be steadfast? Ask yourself this question: ‘Great souls(mahatmas)and sages were also people like me. If they could attain perfection, so can I if I follow their method. What profit do I get spending my time in discovering the faults and weakness of others?’ Thus the first spiritual practice(sadhana)is to search for the faults and weaknesses within yourself, and to strive to correct them and become perfect. The unceasing toil of each succeeding day has as its aim and justification this consummation: to make one’s last days sweet and pleasant. But each day also has its evening. If the day is spent in good deeds, then the evening blesses us with deep sleep, invigorating refreshing sleep, the sleep which is said to be akin tosamadhi.(Prema Vahini, Ch 1.)
உங்களது மனங்கள், வெளி உலகப் பொருட்கள் மற்றும் வெளி உலகைப் பற்றிய கண்ணோட்டம் மற்றும் விமர்சனங்களிலேயே திளைத்திருக்குமானால், அவை உறுதியாக இருப்பதற்கு எவ்வாறு பயிற்சி பெற முடியும்?உங்களையே நீங்கள் இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள், '' பல தலை சிறந்த மஹாத்மாக்களும், முனிவர்களும் என்னைப் போன்ற மனிதர்களே.அவர்கள் பரிபூரணத்துவத்தை அடைய முடியும் என்றால், நானும் அவர்களது முறையைப் பின்பற்றினால், அதை அடைய முடியும்.பிறரிடம் உள்ள குற்றம் மற்றும் குறைகளைக் கண்டு பிடிப்பதிலேயே என் நேரத்தைச் செலவிடுவதால் என்ன பலன் எனக்குக் கிடைக்கப் போகிறது?'' என்று. எனவே, முதல் ஆன்மீக சாதனை, உங்களுள் உள்ள குற்றம் மற்றும் குறைகளைக் கண்டறிந்து,அவற்றைக் களையப் பாடுபட்டு, பரிபூரணர்களாக ஆவது தான். இறுதி நாட்கள் இனிமையானதாகவும், இதமானதாகவும் இருப்பதற்கு,தொடரும் ஒவ்வொரு நாளின் இடையறாத உழைப்பு, இந்த முழுமை அடைவதைத் தான் குறிக்கோளாகவும், அவசியமாகவும் கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு நாளுக்கும் அந்திப் பொழுது எனறு ஒன்று உண்டு. நாள் பொழுதை நற் செயல்களை ஆற்றுவதில் கழிப்போமானால், அந்திப் பொழுது, ஸமாதி நிலைக்கு ஒப்பானதாகக் கூறப்படும் ஆழ்ந்த, புத்துயிரூட்டும், தூக்கத்தை நமக்கு அளிக்கும்.