azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Buddha, Jesus Christ, Shankaracharya, Vivekananda, and many great saints and devotees of the Lord are treasured in the memory of people even to this day. What quality made them memorable for all times to come? It is their character. The qualities that make up a flawless character are: love, patience, forbearance, steadfastness, and charity. These must be revered. Character is the fragrance of the flower of life; it gives value and worth to life. The hundred little deeds that we indulge in every day harden into habits; these habits shape the intelligence and mould our outlook and life. All that we weave in our imagination, seek in our ideals, and yearn in our aspirations leave an indelible imprint on the mind. Poets, painters, artists, and scientists may be great, each in their own field, but without character, they can have no standing in society. (Prema Vahini, Ch 1.)
புத்தர், ஏசு, ஆதிசங்கரர், விவேகானந்தா, மற்றும் பலதலை சிறந்த முனிவர்களும், இறைவனின் பக்தர்களும், இன்றும் கூட மக்களின் மனதில் குடி கொண்டிருக்கிறார்கள்.எல்லாக் காலங்களிலும் நினைவில் வைத்துக் கொள்ளத் தக்கவர்களாக இருப்பதற்கு, அவர்களிடம் இருந்த தகுதி என்ன? அதுவே அவர்களது நல்லொழுக்கம். ப்ரேமை, பொறுமை,சகிப்புத் தன்மை, நிலைகுலையாமை மேலும் தான குணம் ஆகியவையே, அப்பழுக்கற்ற நல்லொழுக்கத்தின் குண நலன்கள். இவைகள் போற்றி மதிக்கப் பட வேண்டும். நல்லொழுக்கமே,வாழ்க்கை எனும் மலரின் நறுமணம்;அதுவே வாழ்க்கைக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கிறது. நாம் தினந்தோறும் செய்யக் கூடிய நூற்றுக் கணக்கான சிறு சிறு செயல்களே,பழக்க வழக்கங்களாக நிலை கொண்டு விடுகின்றன; இவையே புத்தியை வடிவமைத்து, நமது கண்ணோட்டத்தையும், வாழ்க்கையையும் உருவாக்குகின்றன. கற்பனைகளில், நாம் புனைவதனைத்தும், இலட்சியங்களில் நாம் நாடுபவையும், நமது ஆசைகளில் நாம் தேடுபவையும்,நமது மனதில் அழியா முத்திரைகளாக பதிந்து விடுகின்றன.கவிஞர்கள்,ஓவியர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தலை சிறந்தவர்களாக இருக்கலாம், ஆனால் நல்லொழுக்கம் இன்றி அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து இருப்பதில்லை.