azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 11 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 11 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Within humans there is some residual animal nature and this nature must be refined and transformed. One who is able to transform this animal nature in man is Govinda. For an animal, human nature is inaccessible as a goal, but for human, Divinity is accessible as a goal. When green grass is shown to a herbivorous animal, it is attracted, comes close and expresses its pleasure by moving its tail. The same animal runs away if you take a stick to hurt it. Human beings today are attracted and come closer when they see wealth, but if someone is angry and shouts at them, they stay away from them. Is this not displaying animal nature? As human beings, never be afraid of anyone nor should you cause fear to others. Bhaja Govindam exhorts you to control your animal nature within and attain Divine proximity. Chant the loving Name of God daily and grow in faith and confidence in Him. ( Summer Showers in Brindavan, Ch 3, 22 May 1973.)
மனிதர்களுக்குள் சிறிது மிருக குணத்தின் மீதம் இருக்கிறது; இதைப் பதப்படுத்தி, மாற்றியே ஆக வேண்டும்.மனிதனின் உள்ளே இருக்கும் இந்த மிருக குணத்தை மாற்ற முடிந்த ஒருவனே கோவிந்தன்.ஒரு மிருகத்திற்கு, மனித இயல்பைப் பெறுவது என்ற இலக்கு அடைய முடியாத ஒன்று; ஆனால் மனிதனுக்கோ தெய்வீகம் என்பது அடையக்கூடிய ஒரு இலக்கே. புல்லை ஒரு சாகபக்ஷிணியான மிருகத்திடம் காண்பித்தால்,அது கவரப்பட்டு, அருகில் வந்து, தனது வாலை ஆட்டி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தும்.அதே மிருகம், அதை அடிப்பதற்கு ஒரு கம்பை நீங்கள் எடுத்துக் கொண்டால், விலகி ஓடி விடும்.இந்நாளில் மனிதர்கள் செல்வத்தைக் கண்டால், கவரப்பட்டு , நெருங்கி வருகிறார்கள்; ஆனால் யாராவது கோபப்பட்டு, அவர்களைச் சத்தம் போட்டால்,அவர்களிடமிருந்து விலகிச் சென்று விடுகிறார்கள். இது மிருக குணத்தை வெளிப்படுத்துவதே அல்லவா? மனிதர்களான நீங்கள் எவரைக் கண்டும் ஒரு போதும் பயப்படவும் செய்யாதீர்கள்; பிறருக்கு பயத்தையும் உண்டாக்காதீர்கள்.ஸ்ரீமத் பஜ கோவிந்தம் உங்களுள் உள்ள மிருக குணத்தைக் கட்டுப்படுத்தி, தெய்வீகத்தின் அருகாமையை பெறுமாறு அறிவுறுத்துகிறது.தினமும் இறை நாமஸ்மரணையைச் செய்து, அவன் பால் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.