azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Mind control, restraining the senses, transcending the worldly dualities, forbearance, unwavering faith, and equanimity are the primary virtues that must exist in a true spiritual aspirant. In addition, there must be an intense longing for liberation(moksha).This longing cannot arise from riches or scholarships. Nor can it emerge from wealth, progeny, rites and rituals recommended in the scriptures, or acts of charity. Moksha can come only from the conquest of ignorance(ajnana).A person might master all the scriptures along with all the learned commentaries written on them by experts, or propitiate all the gods by performing the prescribed modes of worship and ceremonies. But this cannot grant the boon of liberation. Just like a person who may have every ingredient needed for cooking, but if fire is not available, can he prepare the meal? Success in acquiring self-knowledge alone can confer salvation. (Sutra Vahini, Ch 1.)
மனக்கட்டுப்பாடு,புலனடக்கம்,இவ்வுலகின் இருமைத் தன்மைக்கு அப்பாற்பட்ட மனப்பாங்கு,சகிப்புத் தன்மை,நிலைகுலையாத நம்பிக்கை மற்றும் சமச்சீரான மனநிலை ஆகியவையே ஒரு உண்மையான ஆன்மீக சாதகருக்கு இருக்க வேண்டிய தலையாய நற்குணங்களாகும்,இதைத் தவிர,மோக்ஷம் பெற வேண்டும் என்பதில் தீவிரமான தாபம் இருக்க வேண்டும்.இப்படிப் பட்ட தாபம் பணத்தாலோ அல்லது பாண்டியத்தாலோ வராது. இது , செல்வம், சந்ததி, சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் அல்லது தான தர்மங்களாலும் வர முடியாது. மோக்ஷம், அஞ்ஞானத்தை வெல்வதால் மட்டுமே வர முடியும். ஒருவர், அனைத்து சாஸ்திரங்களையும்,அதற்கு பண்டிதர்களால் எழுதப்பட்ட பாஷ்யங்களையும் கரைத்துக் குடித்திருக்கலாம் அல்லது விதிக்கப் பட்ட முறையிலான வழிபாடுகள் மற்றும் சடங்குகளால் அனைத்து தேவதைகளையும் திருப்திப் படுத்தி இருக்கலாம்.ஆனால் இவை அனைத்தும் மோக்ஷம் எனும் வரத்தைத் தர இயலாது. ஒருவரிடம் சமைப்பதற்கான அனைத்து பொருட்களும் இருந்தாலும்,நெருப்பு இல்லை என்றால் அவரால் உணவைத் தயாரிக்க முடியுமா? ஆத்ம ஞானத்தைப் பெறுவதில் வெற்றி பெறுவது மட்டுமே, மோக்ஷத்தை அளிக்க முடியும்.