azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Scriptures are designed to ensure the peace and prosperity of the world as well as the spiritual perfection of humanity. They lead you to Self-realization. So you must have faith orshraddhain the holy scriptures andGurus.NobleGurusmust and will instruct people on the knowledge of the one Divine Soul immanent in every living being(sarva jivaatmaikya jnana).Your intellect must rest upon and draw inspiration from the Divine Soul, at all times and under all circumstances. You must be attached only to the Divine and all your actions must have the only goal of pleasing God. You must act with the implicit faith that all living beings are facets and fractions of God, and look upon all beings as equal. For this experience, the quality of equanimity(sama-dhana)is a treasure. (Sutra Vahini, Ch 1.)
Recognize God in all that exists, all that is charming or suffering, blooming or drooping. He is the intelligence in the insect, faithfulness in the dog, and latent energy in the rock! – Baba
மறைநூல்கள்,உலகத்தின் சாந்தி,சந்தோஷங்களையும், மனித குலத்தின் ஆன்மீக பரிபூரணத்தையும் உறுதி செய்வதற்காக வடிவமைக்கப் பட்டவை. அவை உங்களை ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு ( தன்னை உணர்தல்) இட்டுச் செல்கின்றன.எனவே, உங்களுக்கு புனித நூல்களிலும், குருமார்களிடமும் சிரத்தை இருக்க வேண்டும்.தலை சிறந்த குருமார்கள் மனிதர்களுக்கு ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் உறையும் ஒரே தெய்வீகத்தைப்(ஸர்வஜீவாத்ம ஐக்யஞான) பற்றிய அறிவை போதிப்பார்கள், போதிக்கவும் வேண்டும். உங்களது புத்தி , எல்லாக் காலங்களிலும்,எல்லா சந்தர்ப்பங்களிலும் பரமாத்மாவில் நிலை கொண்டு, அதிலிருந்து உத்வேகம் பெற வேண்டும். நீங்கள் இறைவன் பால் மட்டுமே பற்றுதல் கொண்டிருக்க வேண்டும்; உங்களது அனைத்து செயல்களும்,இறைவனைத் திருப்திப் படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு இருக்க வேண்டும். அனைத்து ஜீவராசிகளும், இறைவனது முகப்புகள் மற்றும் அங்கங்களே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நீங்கள் செயலாற்றி,அனைத்து ஜீவராசிகளையும் சரிசமமாகக் கருத வேண்டும்.இந்த அனுபவம் பெறுவதற்கு சமச்சீரான மனப்பாங்கு ( ஸமா-தானா ) ,ஒரு வரப்பிசாதம் ஆகும்.
இருக்கும் அனைத்திலும்,அழகானவையோ அல்லது அவதிப்படுபவையோ, மலர்ந்து கொண்டிருப்பவையோ அல்லது மடிந்து கொண்டிருப்பவையோ, இறைவனைக் காணுங்கள்.பூச்சியில் அவன் புத்தியாக, நாயில் அவன் நன்றியுணர்வாக,கல்லில் அவன் மறைந்துள்ள கனலாக இருக்கிறான்!-பாபா