azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The attitude of forbearance(Titiksha)refuses to be affected or pained when afflicted with sorrow, loss, or ingratitude and wickedness of others. In fact, you must remain calm, and bear all blows patiently and gladly, without any form of retaliation, for these are results of your own past actions. The natural reactions of people, when someone injures them are to hurt them in return, that is, return harm and insult to those who harm them and insult them. These are characteristics of the worldly path(pravritti).Those who seek the inner path of sublimation and purification(nivritti)must desist from such reactions. For, if you choose to return injury for evil, you are only adding to your own karmic burden! Paying evil with evil may confer immediate relief and contentment, but will never lighten the weight of karma. Forbearance, therefore, requires people to do good even to those who injure them. (Summer Showers 1974, Ch 22.)
சகிப்புத் தன்மையான மனப்பாங்கு,துயரம்,இழப்பு அல்லது நன்றியற்ற தன்மை மேலும் பிறரது வஞ்சம் ஆகியவற்றால் பீடிக்கப் படும்போது, அவற்றால் பாதிக்கப்படவோ அல்லது துன்பப்படவோ மறுக்கிறது. உண்மையில், நீங்கள் அமைதியாக இருந்து, இந்த அடிகளை எல்லாம் பொறுமையாகவும் சந்தோஷமாகவும், எந்த விதமான பதிலடியும் கொடுக்காமல் சகித்துக் கொள்ள வேண்டும்;ஏனெனில் இவை அனைத்தும் உங்களது முந்தைய கர்மாவின் விளைவுகளே.யாராவது அவர்களுக்குத் தீங்கோ அல்லது அவமானமோ இழைத்தால், மனிதர்களது இயற்கையான செயல்பாடு, அவர்களும் பதிலுக்கு தீங்கும் அவமானமும் இழைப்பது தான். இவை உலகியலான பாதையின் ( ப்ரவிர்த்தி) குணாதிசியங்கள். பதங்கப்படுத்தும் மற்றும் தூய்மைப் படுத்தும் உள்ளார்ந்த பாதையை ( நிவ்ருத்தி) நாடுபவர்கள் இப்படிப் பட்ட பிரதி செயல்களைத் தவிர்க்க வேண்டும்.ஏனெனில்,நீங்கள் தீமைக்கு எதிராக துன்பம் இழைப்பதைத் தேர்ந்து எடுத்தால்,நீங்கள் உங்களது கர்மச் சுமையைத்தான் மேலும் கூட்டுகிறீர்கள் !தீங்கிற்குத் தீங்கால் பதிலடி கொடுப்பது உடனடியான நிவாரணமும், திருப்தியும் தரலாமே அன்றி, உங்களது கர்மச் சுமையை அது ஒருநாளும் குறைக்காது.சகிப்புத் தன்மை, எனவே, மனிதர்கள், அவர்களுக்குத் தீங்கு இழைத்தவர்களுக்குக் கூட நன்மையையே செய்யப் பணிக்கிறது.