azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

A bubble is born out of water, made up of water, and it ultimately mixes with water and disappears. Man is like a bubble andNarayana(God) is like the water source. Man is born out ofNarayana,is made up of Him and ultimately merges with Him. This is the simple and elemental truth. Thejiva(individual) has three aspects: one is the spiritual, the other is the material, and the third is something connected with daily life. These three aspects resemble the deep sleep state, the waking state and the dreaming state. Just as the waves are created out of water and are contained in water, so also the worldly life is contained in the spiritual life. Sweetness and coolness are qualities of water. These qualities are also noticed in the waves and in the foam. SimilarlySat,ChitandAnanda(Being, Awareness and Bliss) are three attributes which may be noticed in an individual. Through the individual, they show up in the worldly life and thus demonstrate the spiritual aspect present in every individual. (Summer Showers 1977, Ch 8.)
ஒரு நீர்க்குமிழி, நீரிலிருந்து தோன்றி, நீரால் அமைந்து,இறுதியில் நீரிலேயே கலந்து மறைந்து விடுகிறது. நரனான மனிதனும் ஒரு நீர்க்குமிழி போன்றவனே; நாராயணனே நீர் ஆதாரம் போன்றவன். நரனும் ( மனிதனும்) நாராயணனிலிருந்து தோன்றி, நாராயணனால் அமைக்கப் பட்டு,இறுதியில் அவனிலேயே ஒன்றரக் கலந்து விடுகிறான். இதுவே சாதாரணமான,அடிப்படை சத்தியம் ஆகும்.தனி மனிதன் ( ஜீவா ) மூன்று அம்சங்களை உடையவன். ஒன்று ஆன்மீகம், அடுத்தது பொருட்களாலானது, மூன்றாவது அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப் பட்ட ஒன்று. இந்த மூன்றும் ஆழ்ந்த உறக்கம், விழிப்பு நிலை மற்றும் கனவு நிலை ஆகியவற்றை ஒத்தவை. எவ்வாறு அலைகள் நீரிலிருந்து தோன்றி, நீரிலேயே இருக்கின்றனவோ, அவ்வாறே, உலகியலான வாழ்க்கையும் ஆன்மீக வாழ்க்கையில் இருக்கிறது.இனிமையும்,குளுமையும் நீரின் தன்மைகள். இதே தன்மைகள் அலைகளிலும்,நுரையிலும் கூடத் தென்படுகின்றன. அதைப் போலவே, சத்,சித்,ஆனந்தம் என்ற மூன்று குணங்களையும் ஒரு தனி மனிதனில் காணலாம்.தனி மனிதனின் மூலம் அவை உலகியலான வாழ்க்கையில் வெளிப்பட்டு, ஒவ்வொருவரிலும் உள்ள ஆன்மீகத் தன்மையை எடுத்துக் காட்டுகின்றன.