azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Birds, beasts and trees do service to man, without anticipating any recompense, but human beings seek help from their kind, from their parents, preceptors and even God, offering in return only insult and injury. They parade their loyalty to Truth, Right Conduct, Peace and Nonviolence - virtues arising from self-less love; but it is only for exhibition and not for experience. They long to receive respect and affection from others but are reluctant to treat others in the same manner. Their full concern is centered on the body-mind complex, ignoring the fact even a hundred-year long life has to end in the cemetery. In order to free oneself from the ego, people must learn to recognize the one Divinity that temporarily wears different forms and names to distract by apparent multiplicity. Removal of this mistaken view and attainment of the awareness of the unity in Divinity - this is the true purpose of education. (Divine Discourse, 5 Dec 1985.)
பறவைகள், மிருகங்கள் மற்றும் மரங்கள் எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பாராது மனிதருக்கு சேவை புரிகின்றன; ஆனால் மனிதர்களோ, தங்களது சகமனிதர்கள், பெற்றோர்கள், குருமார்கள்,ஏன் இறைவனிடமிருந்தே கூட உதவியை நாடி, அதற்கு பதிலாக தூற்றுதலையும், துன்பத்தையுமே அளிக்கின்றனர். தன்னலமற்ற அன்பிலிருந்து எழும் நல்லொழுக்கங்களான சத்யம், தர்மம்,சாந்தி, மற்றும் அஹிம்ஸை ஆகியவற்றின் மீது அவர்களுக்கு விசுவாசம் இருப்பது போலக் காட்டிக் கொள்கின்றனர்; ஆனால் இவை வெறும் விளம்பரத்திற்காகவே அன்றி, அனுபவத்திற்காக அல்ல.அவர்கள் பிறரிடமிருந்து மரியாதையையும், பரிவையும் பெற ஏங்குகிறார்கள், ஆனால், அதே போலப் பிறரை நடத்தத் தயங்குகிறார்கள்.நூறு வருடம் நீண்ட வாழ்க்கை கூடக் கல்லறையில் தான் முடிய வேண்டும் என்ற உண்மையைப் புறக்கணித்து,அவர்களது கவனம் எல்லாம் இந்த உடல்-மனம் என்ற கலவை மீது தான் குடி கொண்டு இருக்கிறது. அஹங்காரத்திலிருந்து ஒருவர் விடு பட வேண்டுமானால், அந்த ஒரே தெய்வீகமே தாற்காலிகமாக பல நாம, ரூபங்களை ஏற்று, பலவாக இருப்பது போன்ற தோற்றத்தின் மூலம் நம்மை திசை திருப்புகிறது என்பதை உணரக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். இந்த தவறான பார்வையை விலக்குவது மற்றும் தெய்வீகத்தின் ஒருமையைப் பற்றிய உணர்வைப் பெறுவது-இதுவே கல்வியின் உண்மையான நோக்கம்.