azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 21 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 21 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

“When the Lord takes on the deluding human form, He moves with us, mixes and dines with us, behaves as our very own kinsman, well-wisher, friend, and guide; and also saves us from many a calamity that threatened to overwhelm us. He showered divine mercy on us and solved the toughest problems that defied solution, in remarkably simple ways. When He was near and dear to us, we were carried away by pride that we had His grace and did not try to fill ourselves with that supreme joy, to dive deep into the flood of His grace. We sought from Him mere external victory and temporal benefits, ignoring the vast treasure that could have filled our hearts. We never contemplated on His reality. We might be born many times over, but can we ever have such a friend and kinsman again?”, remarked Arjuna recounting the time he spent with Krishna.(Ch 10, Bhagavatha Vahini)
அர்ஜூனன் தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணருடன் கழித்த காலத்தை நினைவு கூறும்போது, ''நம்மை மாயையில் ஆழ்த்தும் மனித ரூபத்தை பகவான் ஏற்று வரும்போது, அவர் நம்மிடையே வந்து, கலந்து பழகி , நம்முடன் சாப்பிட்டு, நமது பந்துக்களைப் போலவே பழகி,நமது நல விரும்பியாக, நண்பராக, வழிகாட்டியாக இருக்கிறார். நம்மை நசுக்கி விடுவது போல அச்சுறுத்தும் பல ஆபத்துக்களிலிருந்து நம்மைக் காக்கவும் செய்கிறார்.அவர் நம் மீது தெய்வீகக் கருணையைப் பொழிந்து, தீர்க்கவே முடியாத கடினமான பிரச்சனைகளை, வியக்கத்தக்க எளிய வழிகளில் தீர்த்து வைத்தார்.அவர் நமக்கு அருகிலும், அன்பானவராகவும் இருந்த போது,நாங்கள் அவரது அருள் கிட்டி விட்டது என்ற இறுமாப்பில் திளைத்து எங்களை மறந்து, அவரது கருணை வெள்ளத்தின் ஆழத்தில் மூழ்கும் தலை சிறந்த ஆனந்தத்தால் எங்களை நிரப்பிக் கொள்ளாமல் போய் விட்டோம். நாங்கள், எங்கள் இதயங்களை நிரப்ப வல்ல பரந்து விரிந்த பொக்கிஷத்தை உதாசீனப்படுத்தி விட்டு, அவரிடமிருந்து வெறும் வெளிப்படையான வெற்றிகளையும், தாற்காலிகமான பயன்களையும் மட்டுமே வேண்டினோம். நாங்கள் அவரது உண்மை நி¨லையைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கவே இல்லை.நாங்கள் பல ஜன்மங்கள் எடுக்கக் கூடும், ஆனால் இப்படிப் பட்ட ஒரு பந்து சகாவை மறுபடியும் பெற இயலுமா?'' என்றான்.