azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Pure and unselfish love towards all living beings considering them as embodiments of the Divine, with no expectation of reward, is alone true love. Love must be free from dislikes, friendly, and compassionate towards all beings(Adweshtā sarvabhūtānām maitraḥ karuண்aivacha)!Whatever be the vicissitudes one may face, whatever be the personal sorrows and privations one may undergo, true love should remain unaffected. Today, when any difficulty arises or when some trouble crops up, love turns into hatred. True love is the sweet fruit that grows out of the fragrant flower of good deeds. Love rules without recourse to the sword. It binds without laws. Like the lotus which blooms when the Sun rises, the heart of man blossoms when love enters it. Like the glow of the flame in a fire, like the rays of the Sun, Divine Love is the natural quality present in every human being. (Divine Discourse, 6 May 1985.)
அனைத்து ஜீவராசிகளிடத்தும்,அவற்றை தெய்வ ஸ்வரூபங்களாகக் கருதி, எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பாராது செலுத்தும் தூய்மையான, தன்னலமற்ற அன்பே உண்மையான அன்பாகும்.அன்பு என்பது அனைத்து ஜீவராசிகளிடத்தும் வெறுப்புக்களற்றதாக, நட்புணர்வும் கருணையும் கொண்டதாக இருக்க வேண்டும். ( அத்வேஷ்டா ஸர்வ பூதானாம் மைத்ர கருணையேவச ). எந்த விதமான ஏற்றத் தாழ்வுகளை ஒருவர் எதிர் கொள்ள வேண்டி வந்தாலும்,எந்த விதமான சொந்த இன்னல்கள் மற்றும் இடர்பாடுகளை ஒருவர் அனுபவிக்க வேண்டி வந்தாலும், உண்மையான அன்பு பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும்.இன்று,ஏதாவது ஒரு துன்பம் வந்தாலோ அல்லது ஏதாவது இடர் வந்தாலோ அன்பு ,த்வேஷமாக மாறி விடுகிறது. உண்மையான அன்பு என்பது, நற்செயல்கள் என்ற நறுமண மலர்களிலிருந்து தோன்றிய இனிமையான பழம் போன்றதாகும்.அன்பு என்பது ஆயுதமின்றி ஆளுமை புரிகிறது. அது சட்டங்களின்றி முறைப்படுத்துகிறது. ஆதவனைக் கண்டு மலரும் தாமரையைப் போல, அன்பு நுழைந்தவுடனேயே ஒரு மனிதனுடைய இதய கமலமும் மலருகிறது. நெருப்பில் உள்ள பிழம்பின் ஒளியைப் போல,சூரியனின் கிரணங்களைப் போல,தெய்வீக அன்பு என்பது ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும் இயல்பான குணமாகும்.