azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 17 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 17 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

We see the outer circumstances, the processes that result in the final event, and in our ignorance we judge that this set of causes produced these effects. We guess the nature of emotions and feelings from what we gauge from events. But circumstances, events, emotions, and feelings are all simply ‘instruments’ in His hands, serving His will and His purpose. When the moment comes, He uses them for His plan and brings about the outcome He has willed. He is the embodiment of time(Kala);He comes as the Master of Time. The force ofAtmicfaith is the bridge that spans the chasm, and for those who have developed that force and faith, floods are of no concern. With strong faith as their safe support, they can reach the other bank, braving all dangers. All this, is but a grand puppet show by the Creator, the Master Director! (Bhagavatha Vahini, Ch 9.)
The current animates and activates all bulbs; the Divine animates and activates all. – Baba
ஒரு சம்பவத்தின் இறுதி நிகழ்வின் செயல்முறைகளான வெளிப்படையான சந்தர்ப்பங்களைப் பார்த்து விட்டு, நமது அறியாமையால், நாம் இன்ன இன்ன காரணங்கள், இந்த இந்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்று முடிவு கட்டி விடுகிறோம். நிகழ்வுகளிலிருந்து நாம் என்ன மதிப்பீடு செய்கிறோமோ, அதிலிருந்து, உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் இயல்பை, நாம் யூகிக்கிறோம். ஆனால், சந்தர்ப்பங்கள், நிகழ்வுகள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் எல்லாம், இறைவனது கைகளில் ,அவனது ஸங்கல்பம் மற்றும் நோக்கத்திற்காகப் பணி ஆற்றும் வெறும் கருவிகளே. ஒரு குறிப்பிட்ட தருணம் வரும்போது, அவன், தனது திட்டத்திற்கு அவற்றைப் பயன்படுத்தி, அவன் ஸங்கல்பித்துள்ள விளைவை ஏற்படுத்துகிறான். அவன் காலஸ்வரூபன்; அவன் காலத்திற்கே அதிபதியாக வருகிறான்.ஆத்ம விஸ்வாஸ சக்தியே, ஆழமான ஆற்றுப்படுகைகளை இணைக்கும் பாலமாகும்; இந்த சக்தி மற்றும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டவருக்கு, பெருகி ஓடி வரும் வெள்ளம் ஒரு பொருட்டல்ல.உறுதியான நம்பிக்கையை, பாதுகாப்பான துணையாகக் கொண்டு,அனைத்து ஆபத்துக்களையும் எதிர்கொண்டு, அவர்களால் ஆற்றின் மறு கரையை அடைந்து விட முடியும். இவை அனைத்தும், அந்த சிருஷ்டி கர்த்தா மற்றும் தலைமை இயக்குனரான இறைவனின் மாபெரும் பொம்மலாட்டமே அன்றி வேறல்ல !
அனைத்து பல்புகளுக்கும் உயிரூட்டி,இயங்கச் செய்வது மின்சாரமே; அனைத்துக்குமே உயிரூட்டி,இயங்கச் செய்வது தெய்வீகமே - பாபா