azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 09 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 09 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The little infant (Parikshit) was placed on a gold plate for his naming ceremony. The child immediately started moving, as if searching for someone desperately and soon made a beeline towards Lord Krishna. He grasped Krishna's feet and pleaded, by his looks, to be taken by Him and fondled! The Lord responded to the yearning, laughed, graciously bent and lifted the child onto His lap. The prince stared at the Lord's face without even a blink; he didn't turn his head this way or that, or pull at anything with his hands or make any sound. Everyone, including Lord Krishna were amazed at this behavior, it was so unlike any child. Then, the Lord tried to distract the attention of the child from Himself by placing before him a variety of toys, and Himself hiding from view, expecting the child to forget Him. But the child's attention was not drawn towards any play or objects. He sought the Lord Himself and no other. (Bhagavatha Vahini, Ch 3.)
What you have to seek from God is God Himself. – Baba
பச்சிளம் குழந்தையான பரீக்ஷித்,நாமகரண விழாவிற்காக தங்கத் தட்டில் இடப்பட்டான்.அந்த குழந்தை உடனேயே யாரோ ஒருவரைத் துடிப்புடன் தேடுவதைப் போலத் தவழ ஆரம்பித்தது; விரைவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி நகர ஆரம்பித்தது.பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களைப் பற்றிக் கொண்டு ,தன் பார்வையால், அவரால் எடுத்துக் கொள்ளப் பட்டு, கொஞ்சப் பட வேண்டுவதைப் போலக் கெஞ்சியது !பகவானும் உடனேயே அதனது வேண்டுதலுக்கு இணங்கி, சிரித்து , அன்புடன் குனிந்து அந்தக் குழந்தையை தனது மடியில் எடுத்துக் கொண்டார்.அந்த இளவரசக் குழந்தை பகவானின் முகத்தைக் கண் கொட்டாமல் பார்த்தது; தனது தலையை இந்தப் பக்கமோ , அந்தப் பக்கமோ திருப்பவும் இல்லை, தனது கைகளால் எதையும் பிடித்து இழுக்கவோ அல்லது எந்தக் கூக்குரலும் இடவோ செய்யவில்லை. ஒவ்வொருவரும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உட்பட, எந்தக் குழந்தைக்கும் இல்லாத இந்த நடத்தையைக் கண்டு அதிசயித்தார்கள். பின்னர் பகவான், அந்தக் குழந்தையின் கவனத்தைத் திருப்புவதற்காக பல பொம்மைகளை அதன் முன் வைத்து, அந்தக் குழந்தை தன்னை மறந்து விடும் என எதிர்பார்த்து ஒளிந்தும் கொண்டார்.ஆனால் அந்தக் குழந்தையின் கவனம் எந்த பொம்மையிலோ அல்லது விளையாட்டிலோ செல்லவில்லை. அது பகவானையே நாடியதே அன்றி,வேறு எதையும் நாடவில்லை.
இறைவனிடம் நீங்கள் எதை வேண்ட வேண்டும் தெரியுமா ? அந்த இறைவனையே தான் - பாபா