azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Divine Love! The Lord pervades everything in the cosmos with His myriad feet, hands, eyes, faces and ears. But not recognizing this fact, people imagine themselves to be the doer and indulge in all kinds of speculation and self-praise. The Lord sees everything. No one can conceal anything from Him. He dwells within and outside every living being. Hence nothing can be hidden from Him. God is present in all beings in one and the same form. Although living beings vary in appearance from each other, God’s presence is consistent. The Sun shines over the water in the lake, in a well, in a vessel, in a river or over the ocean - it is reflected in many ways but the Sun is one. So too, God is one and the same in all beings. There is no one in the world nearer to you than the Divine. (Divine Discourse, Jan 14, 1991.)
God alone is your true selfless friend and benefactor.-Baba
அன்பின் வடிவங்களே ! தனது எண்ணிலடங்காத கால்கள்,கைகள், கண்கள் மற்றும் காதுகளோடு இறைவன் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றிலும் வியாபித்து இருக்கிறான்.இந்த உண்மையை அறியாது, மனிதர்கள், தாங்களே அனைத்தையும் செய்பவர்கள் என்று கற்பனை செய்து கொண்டு,அனைத்து விதமான ஊகங்களிலும், தற்புகழ்ச்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். இறைவன் அனைத்தையும் பார்க்கிறான்.எவரும் அவனிடமிருந்து எதையும் மறைக்க முடியாது.அவன் ஒவ்வொரு ஜீவராசியின் உள்ளும், புறமும் உறைகிறான். எனவே, அவனிடமிருந்து எதையும் ஒளித்து வைக்க இயலாது. இறைவன் அனைத்து ஜீவராசிகளுக்கு உள்ளும் ஒரே விதமான ரூபத்தில் தான் இருக்கிறான். ஜீவராசிகள் ரூபத்தில் ஒவ்வொன்றும் வெவ்வேறாகத் தென்பட்டாலும், இறைவன் இருப்பது ஒன்று போலத் தான்.சூரியன் ஒரு ஏரி, ஒரு பாத்திரம்,ஒரு நதி அல்லது கடலில் உள்ள நீரில் பிரகாசிக்கிறான் - அவன் பலவிதமாக பிரதிபலித்தாலும், சூரியன் ஒருவனே. அனைத்து ஜீவராசிகளிலும் உள்ள இறைவன் ஒரே ஒருவனே.இந்த உலகில் இறைவனை விட, உங்களிடம் நெருக்கமானவர் எவரும் இல்லை.
இறைவன் ஒருவன் மட்டுமே உங்களது உண்மையான தன்னலமற்ற நண்பனும், நலமளிப்பவனும் ஆவான் - பாபா