azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

Destroy all shoots and sprouts of desire; then yourmanasa sarovaram(Lake of your inner consciousness) will be sublimated intoKsheera sagaram(the Pure Ocean of Milk, where the Lord reclines on the serpent-couch). Your real Self will, like the celestial hamsa(swan),revel in the placid waters of that cool lake thus transformed, and discover endless delight. The story of God’s miracles(leelas)is all pure nectar; everyone can drink their fill from any part of that ocean of nectar. The same sweetness exists in every particle. The love of god and the love for god are both eternally sweet and pure, whatever be your choice of worship to accept or attain it. Sugar is sweet when you eat it during the day or in the night! To the person who eats, the time difference – night or day matters, but not for the sugar. Sugar is sweet and consistent in taste, always! So is Divine Love, holy and inspiring ever! (Bhagavatha Vahini, Ch 1, 'The Bhagavatha'.)
ஆசைகளின் அனைத்து செடி,கொடிகளையும் அழித்து விடுங்கள்; பின்னர் உங்கள் மனம் எனும் மானஸரோவர் ஏரி, இறைவன் பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் பாற்கடலாக (க்ஷீர சாகரம்) புனிதமடைந்து விடும். உங்களது ஆத்மா, விண்ணுலக அன்னப் பறவையைப் போல,இப்படி மாற்றம் அடைந்த குளிர்ந்த ஏரியின் அமைதியான நீரில் நீந்தி மகிழ்ந்து, எல்லையற்ற ஆனந்தத்தை அடையும். இறைவனது லீலைகளைப் பற்றிய கதைகள் அமிர்த மயமானவை; ஒவ்வொருவரும் இந்த அமுதக் கடலின் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையானதை அள்ளி அருந்தலாம். அதே இனிமை ஒவ்வொரு துளியிலும் இருக்கும். இறைவன் பால் அன்போ, இறைவனுக்கான அன்போ, அதை ஏற்றுக் கொள்ள அல்லது பெறுவதற்கான உங்களது வழிபாடு எதுவாக இருந்தாலும், இரண்டுமே என்றும் இனிமையானவை மற்றும் தூய்மையானவை. சர்க்கரையை,நீங்கள் பகலில் சாப்பிட்டாலும் அல்லது இரவில் சாப்பிட்டாலும், இனிப்பானதே ! சாப்பிடுபவருக்கு வேண்டுமானால், பகல் அல்லது இரவு என்ற வித்தியாசம் இருக்கலாம் - சர்க்கரைக்கு அல்ல.சர்க்கரை எப்போதும் சுவையில் ஒன்றுபோல இனிப்பாகவே இருக்கும் ! அதைப் போலவே, தெய்வீக அன்பு என்றும் புனிதமானதாகவும்,உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கும்.