azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 26 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 26 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Divine Love! Adhere sincerely to your faith and traditions. Wherever you may be, do not give room for religious or any kind of differences. When we examine the root cause for differences or conflicts, you will find that the real reason is selfish minds, wearing the garb of religion or any other cause, and inciting conflicts amongst the people. If you desire to secure genuine peace in the world, you must hold morality(neethi)as superior to your community(jaathi).Cherish good feelings as more important than religious beliefs. Mutual regard(mamatha),equal mindedness(samatha)and forbearance (Kshamatha)are the basic qualities necessary for every human being. Only the person with these three qualities can be regarded as a true man. Hence all of you must cultivate these three sacred qualities assiduously. Using these qualities, give up all kinds of differences. Then love will develop in you. When love grows, you will have a direct vision of God.(Divine Discourse, Dec 25, 1990.)
A peaceful mind is the abode of love. – Baba
அன்பின் திருஉருவங்களே! உங்கள் மதம் மற்றும் மரபுகளை, மனதாரப் பின்பற்றுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், மத சம்பந்தமான அல்லது எந்த விதமான பேதங்களுக்கும் இடமளிக்காதீர்கள். நாம்,எந்த விதமான பேதங்கள் அல்லது மோதல்களுக்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்தோமானால், அவற்றிற்கான உண்மையான காரணம், மதம் அல்லது வேறு ஏதாவது ஒரு கொள்கை என்ற போர்வையில், மனிதர்களிடையே மோதல்களைத் தூண்டுவது, சுயநலமான மனங்களே என்பதை நீங்கள் காண்பீர்கள்.நீங்கள், இந்த உலகம் உண்மையான சாந்தியைப் பெற வேண்டும் என்று விரும்புவர்களாக இருந்தால், உங்கள் ஜாதியைவிட, நீங்கள் நீதியை உயர்ந்ததாகக் கருத வேண்டும். நல்ல உணர்வுகளை, மத உணர்வுகளை விட அதிக முக்கியத்துவம் கொண்டதாகப் போற்றுங்கள். சகோதரத்துவம் (மமதா), சமத்துவம் (சமதா) மற்றும் சகிப்புத்தன்மை( க்ஷமதா) ஆகியவை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான குணங்களாகும். இந்த மூன்று குணங்களையும் கொண்டவரையே, ஒரு உண்மையான மனிதனாகக் கருத முடியும். எனவே, நீங்கள் அனைவரும் இந்த மூன்று புனிதமான குணங்களையும் விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த குணங்களைப் பயன்படுத்தி, எல்லா விதமான பேதங்களையும் விட்டு விடுங்கள். பின் அன்பு உங்களுள் வளரும். அன்பு வளரும்போது, உங்களுக்கு இறைவனது நேரடி தரிசனம் கிடைக்கும்.
அமைதியான மனமே, அன்பின் உறைவிடம் - பாபா