azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 22 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 22 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no compulsive rule that incarnations should occur only on the earth and in human form. Any place and any form can be chosen by the fully free. Whichever place and form promote the purpose of fulfilling the yearning of the devotee, that place and form are chosen by the will of God. God is above and beyond the limits of time and space. He is beyond all characteristics and qualities, and no list of such can describe Him fully. For Him, all beings are equal. The difference between man, beast, bird, worm, insect, and even a god is but a difference of the ‘vessel’(upadhi).The one single God activates every vessel and gives rise to manifold consequences. God appreciates the consciousness of unity as the basic motive of acts. He doesn’t appreciate the activity itself being one without variety; activity must be suited to the various needs. (Bhagavatha Vahini, Ch 1, 'The Bhagavatha'.)
இறைவனின் அவதாரங்கள்,இந்த பூமியில் மற்றும் மனித உருவில் தான் நிகழ வேண்டும் என்று கட்டாயச் சட்டம் எதுவும் கிடையாது.பரிபூரண சுதந்திரம் கொண்ட பரப்ரம்மம் எந்த இடத்தை வேண்டுமானாலும்,எந்த ரூபத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.எந்த இடம் மற்றும் ரூபம் பக்தனது தாபத்தைத் தீர்ப்பதற்கு ஏற்றதாக இருக்கிறதோ,அந்த இடம் மற்றும் ரூபத்தை இறைவன் தனது ஸங்கல்பத்தினால் தேர்ந்தெடுக்கிறான். கால,தேச பரிமாணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் இறைவன்.அவன் அனைத்து பண்புகள் மற்றும் குணங்களுக்கும் அப்பாற்பட்டவன்;இவற்றின் எந்தப் பட்டியலும் அவனை முழுவதுமாக விவரிக்க முடியாது.அவனைப் பொறுத்த வரை அனைத்து ஜீவராசிகளும் சமமானவையே.மனிதன்,மிருகம்,புழு,பூச்சி, ஏன் மற்றும் ஒரு கடவுள் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசம், அவை ஏற்கும் பாத்திரத்தில் ( உபாதி) உள்ள வித்தியாசமே அன்றி வேறில்லை. ஒரே ஒரு இறைவன் இந்த ஒவ்வொரு பாத்திரத்தையும் இயக்கி, பலதரப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறான்.அனைத்து செயல்களின் அடிப்படை உந்துதலான ஒருமை உணர்வையே இறைவன் பாராட்டுகிறான். செயல்களே பலவகைப்பட்டதாக இல்லாது, ஒன்றாக இருப்பதை அவன் பாராட்டுவதில்லை; செயல்கள், பலதரப்பட்ட தேவைகளுக்கு ஏற்றதாக இருந்து தான் ஆக வேண்டும்.