azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Exulting in praising the Lord is the hallmark of the real good. Avoid being in the company of people who revel in sensory talks. Choose to spend your time in the company of the Divine and be engaged in the Lord’s activities. Only those who act in accordance to the above are God’s own(Bhagavathas).Reading and enjoying the stories of the glory of Krishna (Lord) in a sacred hall, temple, shrine, or hermitage of a saint, or being in the company of the virtuous and the good — that is a source of great inspiration and joy. You can approach pious people, serve them, and listen to their exposition of the glories of God. Taste for such wholesome literature is the result of accumulated merit and effort. Listening will be enough in the beginning; later, the stories will arouse interest in the nature and characteristics of God, and the aspirant will seek and find for oneself the path to realisation. (Bhagavatha Vahini, Ch 1, 'The Bhagavatha'.)
இறைவனைப் போற்றுவதில் களிப்புறுவது என்பது உண்மையான நல்ல மனிதருக்கான அறிகுறியாகும்.புலனின்பங்களைப் பற்றிப் பேசுவதில் திளைப்போரின் நட்பைத் தவிர்த்து விடுங்கள்.தெய்வீகமானவர்களின் நட்பு வட்டத்தில் உங்கள் நேரத்தைச் செலவிடுவதைத் தேர்ந்து எடுத்து இறைப் பணிகளில் ஈடுபடுங்கள்.மேற்சொன்னவாறு நடந்து கொள்பவர்களே இறைவனுக்கே சொந்தமான உண்மையான பாகவதோத்தமர்கள்.ஒரு புனிதமான மண்டபம்,கோவில், சன்னிதி அல்லது ஒரு சாதுவின் ஆஸ்ரமம் ஆகியவற்றில் ஸ்ரீகிருஷ்ணரது (இறைவனது) மஹிமையைப் பற்றிய கதைகைளப் படிப்பதும் கேட்பதும், அல்லது நல்லோர் மற்றும் ஆன்றோர்களுடன் இருப்பதும், சிறந்த உற்சாகம் மற்றும் ஆனந்தத்தின் ஊற்று போன்றதாகும். நீங்கள் பக்திமான்களை அணுகி, அவர்களுக்கு சேவை ஆற்றி, இறைவனது மஹிமைகைளப் பற்றிய அவர்களது விளக்கங்களைக் கேட்டு மகிழலாம். இப்படிப் பட்ட நலந்தரும் இலக்கியங்களின் பால் ஈடுபாடு வருவது, பூர்வ ஜென்ம புண்ணியம் மற்றும் கர்மங்களின் பலனாகும். ஆரம்பத்தில் கேட்பது மட்டுமே போதுமானதாகும்; பின்னர் இந்தக் கதைகள் இறைவனது இயல்பு மற்றும் குணாதிசியங்களைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுவதால், சாதகன் , தன்னை உணர்வதற்கான பாதையைத் தானே தேடி ,அடைந்திடுவான்.