azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 17 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 17 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

You must know that there is no end to the incarnations in which God indulges. He has come down on countless occasions. Sometimes He comes with a part of His glory, sometimes with a fuller equipment of splendour, sometimes for a particular task, sometimes to transform an entire era of time or a complete continent of space. God is like the electric current that flows through various contrivances and expresses itself in many different activities. The wise see only the one uniform current; the ignorant feel that they are all distinct. The HolyBhagavathaelaborates His Story that transforms humanity. The subject matter of theBhagavathais the drama enacted by theAvatarand the devotees who are drawn toward Him. Listening to it promotes the realisation of God. Many sages have testified to its efficacy and extolled theBhagavatha, which they helped preserve for posterity. (Bhagavatha Vahini, Ch 1, 'The Bhagavatha'.)
இறைவன் ஈடுபடும் அவதாரங்களுக்கு முடிவே கிடையாது என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.அவன் எண்ணிலடங்காத சந்தர்ப்பங்களில் இற(ர)ங்கி வந்திருக்கிறான்.சிலமுறை அவன் தனது ஒரு குறிப்பிட்ட மகிமையுடனும், சில சமயம் தனது கருவிகளின் முழுக் காந்தியுடனும், சில சமயம் ஒரு குறிப்பிட்ட பணிக்காகவும், சில சமயம் ஒரு முழு யுகத்திலோ அல்லது ப்ரதேசத்திலோ மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவோ அவன் வருகிறான். பல கருவிகளின் வழியாக பாய்ந்து, பல மாறுபட்ட செயல்களாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மின்சாரத்தைப் போன்றவன் இறைவன். ஞானிகள் ஒரே விதமான மின்சக்தியை மட்டுமே காண்பர்; மூடர்களோ அவை அனைத்தும் வெவ்வேறானவை எனக் கருதுவர்.புனிதமான ஸ்ரீமத் பாகவதம் மனிதகுலத்தையே மனமாற்றம் செய்யும் அவனது கதையை விவரிக்கிறது. ஸ்ரீமத் பாகவதத்தின் உட்கருத்து, அவதாரம் நடத்தும் நாடகத்தையும், அவன் பால் ஈர்க்கப்படும் பக்தர்களையும் பற்றியதாகும். அதைக் கேட்பது இறைவனை உணர்வதற்கு ஊக்கம் ஊட்டுகிறது. பல முனிவர்கள், அவர்கள் வருங்கால சந்ததியினருக்காக பாதுகாத்து வந்த ஸ்ரீமத்பாகவதத்தை, போற்றிப் புகழ்ந்து, அதன் திறத்தன்மையை நிரூபித்திருக்கிறார்கள்.