azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Om is the sum and essence of all the teachings in scriptures about Divinity;“Om ithi ekaaksharam Brahma”states the Vedas, meaning, the one syllableOm, isBrahman, the Divine! Om is a composite of three soundsA (aa), U (oo)andM (mm). It has to be pronounced rising in a crescendo as slowly as possible, and as gradually coming down, until there remains only the echo of the silence reverberating in the cavity of your heart. Do not take it in two stages, arguing that your breath will not hold so long. Persevere until you are able to be stirred by the upward sweep and the downward curve and the silent sequel. These represent the waking, dreaming and sleeping, and the fourth, beyond the three stages. It represents also the flower of your individuality maturing into a fruit and filling you with sweet juice from your own inner essence, and thereafter the final release. (Divine Discourse, Jun 09, 1970.)
Life is loving, listening, lifting, learning and living. – Baba
இறைவனைப் பற்றிய வேதங்களின் அனைத்து போதனைகளின் ஒட்டு மொத்த ஸாரம் '' ௐ '' ஆகும்; '' ௐ இதி ஏகாக்ஷரம் ப்ரம்மா '' என்கின்றன வேதங்கள், அதாவது இந்த ஒரு பதம் ''ௐ'', பரப்ரம்மமே என்று பொருள்.ௐ என்பது மூன்று ஓசைகளின் ஸங்கமமாகும்; அதாவது '' அ '', ''உ '' மற்றும் ''ம''. அதை எவ்வளவு மெதுவாக முடியுமோ, அவ்வளவு ஓசையில் உயர்ந்து கொண்டே வருமாறு உச்சரிக்கப் பட்டு, பின்னர் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து, இறுதியில் அந்த நிசப்தம் மட்டுமே இதயத்தின் ஆழத்தில் அதிர்ந்து கொண்டு இருக்குமாறு செய்யப் பட வேண்டும்.உங்களால் மூச்சை அவ்வளவு அதிக நேரம் பிடிக்க முடியாது என வாதித்து, அதை இரண்டு கட்டமாகச் செய்யாதீர்கள். உயர்ந்து கொண்டே வரும் வீச்சும்,இறங்கிக் கொண்டே வரும் வளைவும் பின்னர் அதைத் தொடரும் நிசப்தமும், உங்களுக்குப் புத்துணர்வு தரும் வரை முயற்சியைத் தொடருங்கள்.இவை விழிப்பு, கனவு மற்றும் தூக்க நிலைகளையும் , பின்னர் அவை மூன்றிற்கும் அப்பாற்பட்ட நான்காம் நிலையையும் குறிக்கின்றன.அது, உங்களது தனித்தன்மை என்ற மலர், முதிர்ந்து ஒரு பழமாகி, உங்களுடைய அந்தராத்மாவின் ஸாரத்திலிருந்து எடுக்கப் பட்ட இனிமையான ரசத்தினால் உங்களை நிரப்பி, அதன் பின்னர் இறுதியாக விடுதலை பெறுவதையும், கூட குறிக்கிறது.
அன்பு செலுத்தி,அக்கறையுடன் கேட்டு,தன்னை உயர்த்திக் கொண்டு,
கற்றுக் கொண்டு,வாழ்வதே வாழ்க்கையாகும் -பாபா