azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

“Maam anusmara - With Me in memory ever,”said Lord Krishna! In your daily life, do not distinguish one task asbhajan, another asbhojan(eating), and the third aspujan(worship of God) - all acts are offering to the Divine. The food you partake is given by Him and digested by Him, so that it yields strength to do His work. Each moment is worthwhile, for He gives it, He uses it, He fills it, He fashions it, and He fulfils it. When He is fully suffused in your every breath, you can achieve the sovereign task of merging in Him. You have that might within you; The Divine cannot be gained by the weak. The remembrance can become permanently established only when you are free from the shackles of spite and envy. Be An-asuya - without the trace of pride or envy, malice or hate, egoism or conceit. The Lord permanently resides in the heart kept assiduously clean.(Divine Discourse, Jun 9, 1970.)
''மாம் அனுஸ்மரா-என் நினைவுடனேயே எப்போதும் '' என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். தினசரி வாழ்க்கையில், ஒரு காரியத்தை பஜன் என்றும், மற்றொன்றை போஜன்( சாப்பிடுவது) என்றும் ,வேறு ஒன்றை பூஜன் (இறை வழிபாடு) என்று பிரித்துப் பார்க்காதீர்கள்; அனைத்து செயல்களுமே இறைவனுக்கு அர்ப்பணிப்புக்களே. அவனது வேலையைச் செய்வதற்கான சக்தியை அளிப்பதற்காக, நீங்கள் சாப்பிடும் உணவு அவனால் தரப்பட்டு, அவனால் ஜீரணிக்கப் படுகிறது.ஒவ்வொரு தருணமும் விலைமதிப்பற்றது ஏனெனில், அவனே அதைத் தருகிறான், அவனே அதை பயன்படுத்துகிறான், அவனே அதை நிரப்புகிறான், அவனே அதை வடிவமைக்கிறான், அவனே அதைப் பூர்த்தியும் செய்கிறான். உங்களது ஒவ்வொரு மூச்சிலும் அவன் முழுவதுமாக பரவி இருப்பானானால், உங்களுக்கே உரித்த பணியான, அவனுடன் ஒன்றரக் கலப்பதை, உங்களால் அடைய முடியும். அதற்கான மஹா சக்தி உங்களுள் உள்ளது; பலஹீனமானவர்களால் இறைவனை அடைய முடியாது. த்வேஷம் மற்றும் பொறாமை எனும் விலங்குகளை நீங்கள் களைந்தால் தான்,இறை தியானம் நிரந்தரமாக நிலை கொள்ள முடியும். அசூயை (அன்-அஸூயா) -அதாவது தற்பெருமை அல்லது பொறாமை, வன்மம் அல்லது வெறுப்பு, அஹங்காரம் அல்லது அகந்தை அற்றவர்களாக இருங்கள். விடாமுயற்சியுடன் தூய்மையாக வைக்கப் பட்டிருக்கும் இதயத்தில் இறைவன் நிரந்தரமாகக் கொலு வீற்றிருப்பான்.