azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 10 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 10 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

God assumes many forms and enacts many activities. The nameBhagavathais given to the descriptions of the experiences of those who have realised Him in those forms and of those who have been blessed by His grace and chosen as His instruments. The great epic calledBhagavathais a panacea that cures physical, mental and spiritual illnesses. ByBhagavathawe also mean those with attachment to God, those who seek the companionship of God. Being in the midst of suchBhagavathasfosters one’s own devotion. Unless you have a taste for God-ward thoughts, you will not derive joy therefrom. To create that taste, theBhagavathatells stories to the earnest inquirer that relate to incarnations. Then one develops the yearning to experience the thrill of God, through all the levels of consciousness. One who has this intense yearning can alone be a trueBhagavatha. (Bhagavatha Vahini, Ch 1, ‘The Bhagavatha’)
The thoughts of a devotee filled with love are always directed towards God, whatever they may be doing or speaking. - Baba
இறைவன் பல ரூபங்களை ஏற்று,பல செயல்களைப் புரிகிறான்.அவனை இந்த அநேக ரூபங்களில் உணர்ந்தவர்கள் மற்றும் அவனால் ஆசீர்வதிக்கப் பட்டு அவனது கருவிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் அனுபவங்களின் விவரத் தொகுப்பிற்கு கொடுக்கப் பட்ட பெயரே '' ஸ்ரீமத் பாகவதம்'' உடல், மனம் மற்றும் ஆன்மீகமான வியாதிகளைக் குணப்படுத்தும் அருமருந்து '' ஸ்ரீமத் பாகவதம்'' ஆகும். '' பாகவதம்'' என்றால்,இறைவன் பால் பற்றுதல் கொண்டு அவனது நட்பை நாடுபவர்கள் என்றும் நாம் கொள்ளலாம்.இப்படிப் பட்ட '' பாகவதர்களுக்கு'' நடுவில் இருப்பது ஒருவரது பக்தியைப் பேணிக் காக்கிறது. உங்களுக்கு இறைவனை நோக்கிய எண்ணங்களில் ருசி இருந்தால் ஒழிய, நீங்கள் அவற்றிலிருந்து சந்தோஷத்தைப் பெற மாட்டீர்கள். அந்த ருசியை ஏற்படுத்துவதற்காக, '' ஸ்ரீமத் பாகவதம்'' உளமாற நாடும் பக்தர்களுக்கு அவதாரங்களைப் பற்றிய கதைகளைக் கூறுகிறது.அனைத்து உணர்வு நிலைகளிலும் இறைவனைப் பற்றிய சிலிர்ப்பான அனுபவத்தைப் பெறும் ஆர்வத்தை ஒருவர் பின்னர் பெறுகிறார். இப்படிப் பட்ட தீவிரமான ஆர்வம் கொண்டவரே ஒரு உண்மையான ''' பாகவதர் ''.
ப்ரேமை நிறைந்த பக்தரின் எண்ணம் எல்லாம், அவர்கள் என்ன செய்து கொண்டு அல்லது பேசிக் கொண்டு இருந்தாலும், எப்போதும் இறைவனை நோக்கியே இருக்கும் - பாபா