azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Keep the Name of the Lord always radiant on your tongue and mind. That will keep the antics of the mind under control. When the lamp is burning, darkness will not spread its fumes around you. When the word forBrahman(Supreme Universal Reality), Om, is spelt with the last breath by the one dying, they attain the Divine. To make that final utterance of Om, just as the flower blossoms on the creeper of life, you need to dwell upon Om all through the years of your current life. The Geeta advocates the process of continuous meditation in a neat little formula:mam anusmara yuddhya cha!- "Keep Me in your memory and fight!" The cue here for you is to fight the battle of life, have God in your consciousness as your Charioteer at all times. This is not merely a direction for Arjuna; it is a prescription for all humanity. (Divine Discourse, June 9, 1970.)
That which eyes cannot see, but which enables the eyes to see – ‘That’ is God. - Baba
இறை நாமத்தை எப்போதும் உங்கள் நாவிலும் ,மனதிலும் ஒளி விட்டுப் பிரகாசிக்குமாறு வைத்திருங்கள்.அது மனதின் கோமாளித்தனங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.தீபம் எரிந்து கொண்டு இருக்கும் வரை, இருளின் சூழல் உங்களைச் சுற்றி இருக்காது.இறப்பின் தருவாயில் இருக்கும் ஒருவர் தனது இறுதி மூச்சின் போது பரப்ரம்மத்தைக் குறிக்கும் ப்ரணவ மந்திரமான '' ௐ '' என்பதை உச்சரித்தால், அவர் இறைவனை அடைகிறார். இறுதியாக ப்ரணவத்தை உச்சரிக்க வேண்டும் என்றால், வாழ்க்கை எனும் கொடியில் மலரும் பூவைப் போல,நீங்கள் உங்களது தற்போதைய வாழ்நாள் முழுவதும் அந்த '' ௐ'' எனும் ப்ரணவத்தை தியானித்துக் கொண்டிருக்க வேண்டும். ஸ்ரீமத் பகவத்கீதை இடையறாத தியானம் செய்வதை ஒரு சிறிய சூத்திரமாகத் தருகிறது - '' மாம் அனுஸ்மரண யுத்ய ச ''-'' என்னை நினைவில் வைத்துக் கொண்டு யுத்தம் செய் ''.இங்கு உங்களுக்கான குறிப்பு என்னவென்றால், இறைவனை உங்கள் மனச்சாட்சியினுள் ஸாரதியாக எப்போதும் வைத்துக் கொண்டு, வாழ்க்கை எனும் யுத்தத்தை நடத்து என்பதாகும்.இது அர்ஜூனனுக்கு மட்டும் அளிக்கப் பட்ட கட்டளை அல்ல, அனைத்து மனித குலத்திற்குமான அறிவுரையாகும்.
கண்களால் எதைக் காண முடியாதோ,அதே சமயம் கண்களை காண வைப்பது எதுவோ, அதுவே '' இறைவன் '' - பாபா