azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The Kaivalya Upanishad declares: “Not by means of works, not by means of human power, not by means of wealth, but by renunciation alone can immortality be attained.” The ‘works’ referred to are rituals like sacrifices, vows, charities, donations, pilgrimages, etc. Through such activities, one cannot achieve liberation; that is to say, one cannot get rid of the veil of ignorance. ‘Human power’ means acquisition of positions of authority, of skill and intelligence which can manipulate people and things, of fame and supremacy, of personal charm, of health and happiness, or of a large family with many children - these cannot confer liberation. The works mentioned above and the acquisitions referred to can succeed only when one has ‘wealth’. But the Upanishad announces that spiritual wisdom is not related to riches. So liberation cannot be earned by means of wealth. Renunciation alone can confer immortality. (Sutra Vahini, 'Stream of Aphorisms of Brahman'.)
கைவல்ய உபநிஷதம், '' கர்மாவினாலோ, சந்ததிகளாலோ ( மனித சக்தி ), தனத்தாலோ அன்றி, தியாகத்தினால் மட்டுமே அமரத்துவத்தைப் பெற முடியும்.'' என்று பறைசாற்றுகிறது. இங்கு ''கர்மா'' என்று கூறப்படுவது சடங்குகளான பலிகள்,விரதங்கள், தான, தர்மங்கள் மற்றும் தீர்த்த யாத்திரைகள் போன்றவற்றைக் குறிக்கின்றன.இப்படிப் பட்ட செயல்களால், ஒருவர் அமரத்துவத்தைப் பெற முடியாது,அதாவது அறியாமை எனும் திரையை விலக்க முடியாது.'' மனித சக்தி '' என்றால், அதிகாரம் கொண்ட பதவிகள்,திறன்கள் மற்றும் புத்திசாலித்தனத்தால் மக்களையும், பொருட்களையும் தனது இஷ்டப்படி ஆட்டி வைக்கும் வல்லமை,புகழ் மற்றும் தலைமை, தனக்கே உரித்த வசீகரம்,ஆரோக்யம் மற்றும் சந்தோஷம் அல்லது பல குழந்தைகளைக் கொண்ட பெரிய குடும்பம் ஆகியவற்றைப் பெறுவதால் மட்டும் அமரத்துவம் கிடைக்காது. மேலே குறிப்பிடப் பட்ட கர்மாக்கள் மற்றும் பிற திறன்களைக் கையகப்படுத்துவது போன்றவை, ஒருவரிடம் தனம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.ஆனால், உபநிஷதங்கள் ஆன்மீக ஞானம், தனத்தைச் சார்ந்தது அல்ல என அறிவிக்கிறது. எனவே, அமரத்துவத்தை தனத்தால் பெற முடியாது.தியாகம் மட்டுமே அமரத்துவத்தை அளிக்க முடியும்.