azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 06 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 06 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

To discriminate between good and bad, one must resort to scriptures. The Vedas emerged from the Divine Himself and were ‘heard’ by sages attuned to the voice of the Divine, who in turn, taught them to their disciples. This process of imparting the Vedas and the wisdom enshrined in them has continued through many generations ofGurusand disciples until now. The Upanishads, the Brahma Sutra and the Bhagavad Gita contain the very essence of the Vedas. Hence these are designated as ‘three fundamental texts(Prasthana traya)’ of the science of spirituality. Acquisition of higher knowledge alone can fulfil the main purpose of human life; it makes one aware that one is not the inert non-sentient body but an embodiment of being-awareness-bliss. When this truth dawns and is experienced, you are freed from the fog of ignorance and are liberated, in this very life. (Sutra Vahini, 'Stream of Aphorisms of Brahman'.)
Destroy your ego; you have no need to seek liberation; you will be liberation itself. - Baba
நல்லது, கெட்டது எனப் பகுத்து ஆராய்வதற்கு, ஒருவர் சாஸ்திரங்களையே நோக்க வேண்டும்.வேதங்கள் இறைவனிடமிருந்தே எழுந்தவை; தெய்வத்தின் குரலோடு ஒன்றியிருந்த முனிவர்களால் அவை ''கேட்கப்பட்டு'',அவற்றை அவர்கள் தனது சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்கள்.வேதங்களையும், அவற்றில் உள்ள ஞானத்தையும் இவ்வாறு அளிக்கும் முறை, பல தலைமுறைகளில் குரு, சிஷ்ய பரம்பரையாக இன்று வரை தொடர்ந்து வந்துள்ளது. உபநிஷதங்கள், ப்ரம்ம சூத்ரம் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை, வேதங்களின் சாரத்தையே உள்ளடக்கியவை. எனவே தான் அவை ஆன்மீக விஞ்ஞானத்தின் அடிப்படை நூல்கள் (ப்ரஸ்தான த்ரயா ) எனக் குறிப்பிடப் படுகின்றன.உயர்நிலை ஞானத்தைப் பெறுவது மட்டுமே, வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளை அடைவதைப் பூர்த்தி செய்யும்;அதுவே ஒருவரை, தான் இந்த ஜடமான உடல் அல்ல,ஆனால்,சச்சிதானந்த ஸ்வரூபம் என்பதை உணர வைக்கும். இந்த சத்யம் புரிந்து,அனுபவிக்கப் படும் போது, நீங்கள் அறியாமை எனும் இருளிலிருந்து விலகி, இந்தப் பிறவியிலேயே முக்தி அடைந்து விடுவீர்கள்.
உங்கள் அஹங்காரத்தை அழித்து விடுங்கள்;நீங்கள் முக்தியை நாட வேண்டிய அவசியமில்லை;நீங்களே அந்த முக்தியாகி விடுவீர்கள் - பாபா