azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Enter upon that task of Sadhana from now on; that is the lesson you must learn here. Otherwiseyatra(pilgrimage) leads only to the accumulation ofpatra(objects and souvenirs). Devotion is something sweet, soothing, refreshing and restoring. It must confer patience and fortitude. The devotee will not be perturbed if another is blessed with more grace. The devotee is humble and bides one’s time, knowing that there is a higher power that knows more and that it is just and impartial. In the light of that knowledge, the devotees will communicate their troubles and problems only to their Lord; they will not humiliate themselves by talking about them to all and sundry, for what can a man, who is as helpless as another, do to relieve them? It is only those who have that implicit faith in God, who will deign to communicate only with the Lord and none else, who deserveAmrita(nectar of immortality). (Divine Discourse, 28 Dec 1960.)
இப்போதிலிருந்து ஆன்மீக சாதனையில் இறங்குங்கள்;இந்தப் பாடமே நீங்கள் இங்கு கட்டாயம் கற்க வேண்டிய ஒன்றாகும்.இல்லை எனில் பயணம் (யாத்ரா), வெறும் பொருட்களைச் (பாத்ரா) சேர்ப்பதற்கே இட்டுச் செல்லும்.பக்தி என்பது இனிமையான, இதமளிக்கும், புத்துணர்ச்சியூட்டும்,புதுவலிவூட்டும் ஒன்றாகும். அது பொறுமையையும்,மனோபலத்தையும் அளிக்க வேண்டும். வேறு ஒருவருக்கு அதிக இறை அருள் கிடைத்தால், அதனால் ஒரு பக்தர் கலக்கம் அடைய மாட்டார்.பாரபட்சமற்ற,நேர்மையான ஒரு உயர் சக்தி இருக்கிறது என்பதை அறிந்த, அந்த பக்தர் பணிவுடன், தன்னுடைய நேரத்திற்காகக் காத்திருப்பார். இந்த அறிவின் காரணமாக, பக்தர்கள் தங்களது கஷ்டங்களையும் , குறைகளையும் இறைவனிடம் மட்டுமே தெரிவிப்பார்கள்; கண்டவர்களிடம் அவற்றைப் பற்றிப் பேசி, தங்களேயே அவமானப் படுத்திக் கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் பிறரைப் போலவே நிராதரவான ஒரு மனிதனால் அவற்றைத் தீர்க்க என்ன செய்ய முடியும்? இறைவனிடம் உள்ளார்ந்த பக்தி கொண்டு, வேறு எவரிடமும் இன்றி, இறைவனிடம் மட்டும் தெரிவிப்பதே தகுந்தது என்று கருதுபவர்கள் மட்டுமே, பிறவாவரம் (அம்ருதம்) பெற அருகதையானவர்கள்.