azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 01 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 01 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

To pray to God with excessive adulation and request a favour stems from a tone of despondency. Describing Him as One who is beyond praise by Brahma and other gods, and narrating glories beyond description of how He helped devotees and then asking, "Oh Lord! You have talked to them and given them so much! Why don't You come to my help?" appears to stem from jealousy. It is only when God is regarded as a friend and a companion that He is pleased the most. When you address Him as, "O my dearest friend! My beloved One! The darling of my heart," you are giving Him the greatest joy. We use words of praise towards an unfamiliar person to show respect and regard as he/she is a stranger. But we welcome an old friend with easy familiarity and intimacy. Hence approach God as your loving friend, He will come to your aid and fulfill your needs. (Divine Discourse, Oct 9, 1989.)
God alone is totally selfless as a friend and benefactor. - Baba
இறைவனை அளவில்லாது புகழ்ந்து பிரார்த்தித்து, அவனிடமிருந்து சகாயம் வேண்டுவது விரக்தியான மனப்பாங்கிலிருந்து எழுகிறது.அவனை, ப்ரம்மா மற்றும் பல கடவுள்களாலும் கூட புகழ்வதற்கு அப்பாற்பட்டவன் என வர்ணித்து, அவன் எவ்வாறு பக்தர்களுக்கு உதவினான் என்ற வர்ணணைகளுக்கு அப்பாற்பட்ட மகத்துவங்களைக் கூறி, பின்னர், '' ஹே பகவான் !நீ அவர்களிடம் எல்லாம் பேசி, எவ்வளவோ அளித்திருக்கிறாய். எனக்கு உதவ மட்டும் ஏன் வரக்கூடாது ?'' என்று கேட்பது பொறாமையிலிருந்து எழுவதாகத் தோன்றுகிறது.இறைவனை நண்பனாகவும், சகாவாகவும் கருதும்போது தான் அவன் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான். நீங்கள் அவனை, '' என் தலை சிறந்த நண்பனே ! என் அன்பிற்குரியவனே ! எனது இதயத்தின் செல்லமே !'' என்று அழைக்கும் போது ,நீங்கள் அவனுக்கு மிகச் சிறந்த மகிழ்ச்சியை அளிக்கிறீர்கள். நமக்குப் பழக்கம் இல்லாதவருக்கு மரியாதையும், பரிவும் காட்டுவதற்காக, நாம் புகழ்ச்சியான வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் ஏனெனில் அவரோ அல்லது அவளோ நமக்கு அன்னியமானவர்கள்.ஆனால் நமது பழைய நண்பனை எளிதான பரிச்சயம் மற்றும் அன்யோன்யத்துடன் வரவேற்கிறோம். எனவே, இறைவனை உங்களது அன்பார்ந்த நண்பனாக அணுகுங்கள்; அவன் உங்களுக்கு உதவிட வந்து, உங்களது தேவைகளை பூர்த்தி செய்வான்.
நண்பனாகவும, நலமளிப்பவனாகவும் இருப்பதில் இறைவன் ஒருவன் மட்டுமே முழுமையான தன்னலமற்றவன்- பாபா