azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 25 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 25 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

You must become heroes in action. It does not behoove of you to spend your time in idle talk, without involving yourself in some solid work for the benefit of the nation. Bend your body and work hard to attain glory. A seed that is sown in the soil, loses its shape to ultimately become a gigantic tree. That tree yields sweet fruits. Similarly it is only when you destroy your ego and lose your identity, real fruit of your actions come out. Therefore, remove your attachment to your body(dehabhimana)and develop attachment to the country(deshabhimana).Love is a quality permeating every living being. Truth is verily the embodiment of Divinity. It is in you, with you, around you, everywhere, protecting you always, at all times. You need not search for God in some distant place. Truth is the very embodiment of God. Do not ever move away from Truth. (Divine Discourse, 22 Nov 2002.)
நீங்கள் செயல் வீரர்களாக இருத்தல் அவசியம்.நாட்டு நலனிற்காக ஏதாவது உருப்படியான பணி ஆற்றாமல், உங்களது நேரத்தை வெட்டிப் பேச்சில் கழிப்பது உங்களுக்கு அழகல்ல.உடலை வளைத்து ,மேன்மை அடைவதற்காக கடுமையாக உழையுங்கள். நிலத்தில் இடப்பட்ட விதை இறுதியில் பரந்து விரிந்த மரமாக ஆவதற்காக தனது உருவத்தை இழந்து விடுகிறது.அந்த மரம் இனிய பழங்களைத் தருகிறது. அதைப் போலவே,நீங்கள் உங்கள் அஹங்காரத்தை அழித்து, உங்களது தனித்தன்மையை விடுத்தால் மட்டுமே, உங்களது செயல்களின் உண்மையான பலன்கள் வெளிப் படுகின்றன. எனவே,உங்களது உடல் பற்றை (தேஹாபிமானம்) விடுத்து, நாட்டுப் பற்றை ( தேசாபிமானம் ) வளர்த்துக் கொள்ளுங்கள். ப்ரேமை ஒவ்வொரு ஜீவ ராசியின் உள்ளும் வியாபித்து இருக்கும் ஒரு குணமாகும்.சத்யம் தெய்வ ஸ்வரூபமே. அது உங்களுள், உங்களுடன், உங்களைச் சுற்றி, எங்கும், எல்லாக் காலங்களிலும் உங்களைக் காத்து நிற்கிறது. நீங்கள் இறைவனை எங்கோ தொலை தேசத்தில் தேட வேண்டியது இல்லை. சத்யம், சாக்ஷாத் தெய்வ ஸ்வரூபமே. சத்யத்திலிருந்து ஒருபோதும் விலகி விடாதீர்கள்.