azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 21 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 21 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Modern education is mere bookish knowledge, confined to what is contained in the texts. Today many are pursuing such secular education only (i.e., value neutral). Secular education alone is not enough. It must be supplemented with spiritual education. Spiritual education has its effect on one’s heart, and is calledEducare.Educaremeans bringing out the latent Divinity, that is hidden in the heart of human beings and establishing it as an ideal to the whole world. ThroughEducare,you must develop the principle of love and students must follow the path of truth. True education is that which is suffused with truth and love. Secular education is for making a living, whereas spiritual education is for reaching the goal of life. It is the duty of students as well as educators to harmonize the secular education with spiritual education. This is the prime necessity today. (Divine Discourse, 20 Nov 2002.)
நவீன காலக் கல்வி,பாடப்புத்தகங்களில் இருப்பவைகளை மட்டுமே அளிக்கும் புத்தக அறிவே.இன்று பலர், இந்த உலகியலான கல்வியை மட்டுமே பின்பற்றுகிறார்கள். உலகியலான கல்வி மட்டும் போதாது. அதனுடன் கூடவே, ஆன்மீகக் கல்வியும் அளிக்கப் பட வேண்டும். ஆன்மீகக் கல்வி ஒருவரது இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதுவே ''விழுக்கல்வி'' , அதாவது ''எஜூகேர் ''எனப்படுகிறது. ''எஜூகேர் '' என்றால், மனிதர்களது இதயத்தில் பொதிந்து இருக்கும் தெய்வீகத்தை வெளிக் கொணர்ந்து, அதையே இந்த உலகனைத்திற்கும் ஒரு இலட்சியமாக நிலைநிறுத்துவதாகும். ''எஜூகேர் '' மூலம் நீங்கள் ப்ரேம தத்துவத்தை வளர்த்துக் கொண்டு, மாணவர்கள் சத்தியத்தின் பாதையைப் பின்பற்ற வேண்டும். உண்மையான கல்வி என்பது சத்தியம் மற்றும் ப்ரேமை நிறைந்ததாகும்.உலகியலான கல்வி வாழ்க்கை நடத்துவதற்காக என்றால், ஆன்மீகக் கல்வி வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதற்காகவே.உலகியலான கல்வியை, ஆன்மீகக் கல்வியுடன் இசைந்து அளிப்பது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கடமையாகும். இதுவே இந்நாளின் அத்தியாவசியத் தேவையும் ஆகும்.