azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 18 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 18 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

People today speak about God having forgotten them. This is not true. Most often, it is the devotee who gives up God. It is the devotee who forgets Him. It is their own feelings that are reflected in their utterances. People forget God and indulge in the world and one day they suddenly declare that God has forgotten and forsaken them. Separation from God is the primary cause for people wallowing in sensuous pleasures. Mind is the cause of one's pleasure and pain. It must be directed towards God to secure freedom from pleasure and pain. You stray away from God and think God is moving away from you. God can and will never forget His devotee. God is never away from you. He is always with you, caring for you and waiting for you to turn to Him. (My Dear Students, Vol 5, Ch 14, 14 Jan 1996.)
God is always with you, for you, above you, below you, behind you and above you – guiding and guarding you at all times. - Baba
இந்நாளில் மக்கள், இறைவன் தங்களை மறந்து விட்டான் என்று பேசுகிறார்கள். இது உண்மையல்ல.பெரும்பாலும், பக்தன் தான் பகவானை விட்டு விடுகிறான்.பக்தன் தான் பகவானை மறந்து விடுகிறான். அவர்களது உணர்வுகளே, அவர்களது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. மனிதர்கள் இறைவனை மறந்து விட்டு,உலக வாழ்க்கையில் மூழ்கி விட்டு,திடீரென்று ஒரு நாள், இறைவன் அவர்களை மறந்து, கைவிட்டு விட்டான் என்று புலம்புகிறார்கள். இறைவனிடமிருந்து பிரிந்து இருப்பது தான் மனிதர்கள் புலனிம்பங்களில் புதைந்து கிடப்பதற்கான முழு முதற்காரணம்.மனமே ஒருவரது சுக, துக்கங்களுக்குக் காரணம். சுக, துக்கங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு, மனதை இறைவன் பால் செலுத்தியே ஆக வேண்டும். நீங்கள் இறைவனிடமிருந்து வழி தவறிச் சென்று விட்டு, இறைவன் உங்களை விட்டுச் சென்று விட்டான் என்று நினைக்கிறீர்கள்.இறைவன் பக்தனை ஒருபோதும் மறக்க மாட்டான், மறக்க முடியாது.இறைவன் உங்களை விட்டு ஒருபோதும் செல்வதில்லை.அவன் உங்களுடன் எப்போதும் இருந்து, உங்களை அரவணைத்து,நீங்கள் அவனிடம் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.
இறைவன் எப்போதும், உங்களுக்காகவே,உங்களுக்கு மேல்,கீழ்,முன்னால், பின்னால் இருந்து, உங்களை வழி நடத்தி , ரக்ஷிக்கிறான்- பாபா