azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The hard working farmer has no fear of starvation. The one who chants the Lord’s Name has no fear of worldly worries. The person of a few words will be free from enmity. Through excessive talk, people fall prey to quarrels. Everyone must cultivate moderation in speech. Restraint in speech is conducive to friendly feelings. The one who is careful in behavior, doing all actions after due deliberation, will have no fear of danger. True education consists in knowing how to lead a peaceful life. To embark on or have a successful career, you must aspire for world peace. For you are part of the world and your well-being is intimately tied to that of the world. Give up all narrow feelings and acquire unity and fellowship. (My Dear Students, Vol 5, Ch 14, 14 Jan 1996.)
The wise use their money, strength, intelligence, skills, aptitude and opportunities to help others and make their lives happier. - Baba
கடுமையாக உழைக்கும் உழவனுக்கு பட்டினியைப் பற்றிப் பயம் இருப்பதில்லை.இறை நாமஸ்மரணை செய்யும் ஒருவருக்கு,உலகியலான கவலைகள் பற்றிய அச்சம் இருப்பதில்லை.குறைவாகப் பேசும் ஒருவருக்கு எதிரிகள் இருப்பதில்லை.அளவுக்கு மீறிய பேச்சுக்களினால், மனிதர்கள் சண்டை, சச்சரவுகளுக்கு ஆளாகிறார்கள்.ஒவ்வொருவரும் மிதமாகப் பேசுவதை வளர்த்துக் கொள்ள வேண்டும். பேச்சில் நிதானமாக இருப்பது, நட்புறவான உணர்வுகளுக்கு உதவுகிறது.அனைத்து செயல்களையும்,நன்கு ஆராய்ந்தபின் செய்து, தனது நடத்தையில் கவனமாக இருப்பவருக்கு, அபாயங்களைப் பற்றிய அச்சம் இருப்பதில்லை. உண்மையான கல்வி என்பது எப்படி அமைதியான வாழ்க்கை நடத்துவது என்பதை அறிந்து கொள்வதில் தான் இருக்கிறது. வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடங்குவதற்கோ அல்லது பெறுவதற்கோ, நீங்கள் உலக அமைதியை நாடுபவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்களும் இந்த உலகின் ஒரு அங்கமே ;உங்களது க்ஷேமமும், உலக க்ஷேமத்துடன் இறுக்கமாக இணைக்கப் பட்ட ஒன்று தான். அனைத்து குறுகிய எண்ணங்களையும் விடுத்து, ஒற்றுமையையும், தோழமை உணர்வையும் முயன்று பெற்றிடுங்கள்.
புத்திசாலிகள் தங்கள் தனம்,பலம்,புத்தி,திறமைகள்,மனப்பாங்கு மற்றும் வாய்ப்புக்களை மற்றவர்களுக்கு உதவுவதில் பயன்படுத்தி, அவர்களது வாழ்க்கைகளை சந்தோஷகரமானதாக ஆக்கிக் கொள்வார்கள்- பாபா