azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Akhanda Bhajaninvolves constant contemplation on God in the morning, evening or even during the night time. No doubt, many people today are repeating the holy name; but not with love and steady faith. Some are concerned about how others are singing, whether their tune is in order, etc. This equates to doingnamasankirtanwith a wavering mind; no transformation will occur with suchnamasankirtan, despite doing it for hours together. It must be done with absolute concentration and steady faith to achieve transformation. To attain purity that pulverizes all negativity, it is not enough if chanting of the divine name is confined to a limited period. Hence globalAkhanda Bhajanis held for 24 hours, every year. Consider yourself very fortunate to participate in anAkhanda Bhajan. If only you make good use of it, your life will be sanctified. PracticeNamasmaranaand make it a continuous spiritual exercise throughout your life. (Divine Discourse, 13 Nov 2007.)
Chanting the Lord’s name is essential for crossing the turbulent ocean of life. - Baba
அகண்ட பஜன் என்றால் இறைவனை இடையறாது காலை, மாலை, ஏன் இரவில் கூட தியானம் செய்வதே. சந்தேகத்திற்கு இடமின்றி, பலர் இந்நாளில் இறை நாமஸ்மரணை செய்கிறார்கள்;ஆனால் ப்ரேமையுடனும்,நிலையான நம்பிக்கையுடனும் அல்ல.சிலர் மற்றவர்கள் எவ்வாறு பாடுகிறார்கள்;அது ஸ்ருதியுடன் இருக்கிறதா என்பதைப் பற்றியே கவனம் செலுத்துகிறார்கள். இது அலை பாயும் மனதுடன் நாமஸங்கீர்த்தனத்தைச் செய்வதற்கு ஒப்பாகும்;பல மணி நேரங்கள் செய்தாலும் கூட,இப்படிப் பட்ட நாமஸங்கீர்த்தனத்தால் எந்த வித மனமாற்றமும் ஏற்படாது.மனமாற்றம் பெற, இதை முழு மனக்குவிப்புடனும், நிலையான நம்பிக்கையுடனும் செய்ய வேண்டும். அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் தவிடு பொடியாக்கும் மனத்தூய்மையைப் பெற ,ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இறை நாமஸ்மரணை செய்தால் போதாது. எனவே தான், அகில உலக அகண்ட பஜன் ஒவ்வொரு வருடமும் 24 மணி நேரம் தொடர்ந்து செய்யப் படுகிறது. ஒரு அகண்ட பஜனில் பங்கேற்பதை உங்களது பெரிய அதிர்ஷ்டம் எனக் கருதுங்கள். இதை நல்ல முறையில் பயன்படுத்தினால், உங்கள் ஜென்மம் சாபல்யமடையும். இறை நாமஸ்மரணையைக் கடைப்பிடித்து,அதை உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்த ஒரு ஆன்மீக சாதனையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
ஸம்ஸார ஸாகரத்தைக் கடப்பதற்கு இறை நாமஸ்மரணை அத்தியாவசியமாகும் - பாபா