azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 07 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 07 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Lord Krishna in the Gita says, “You are all part of My Divinity. Hence you should follow Me. My love is divine and sacred. So is yours!” (Mamaivamso jeevaloke jeevabhutah sanatanah). If you truly follow this principle, you will automatically achieve purity. Where there is purity, there is Divinity. Since time immemorial, each and every one of you are part of Me; you are My very own. Never forget this truth. If you develop faith in this truth, it will amount to reading all the scriptures. Every human being followsDharma(Righteousness). Where did thisDharmacome from? It has come from feeling(bhava),which in turn emanated from faith(vishwas).Where faith is, thereDharmais! That faith is Truth.Dharmais verily the embodiment of Divinity. Truth is God; Faith is God; Love is God; Live in Love. Only when you cultivate Truth, Faith and Love, you can achieve anything. (Divine Discourse, 13 Nov 2007.)
There is no nobler quality in the world than love. It is wisdom. It is righteousness.
It is wealth. It is Truth. - Baba
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில்,'' நீங்கள் எல்லோரும் எனது தெய்வீகத்தின் அங்கங்களே.எனவே நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும். எனது ப்ரேமை தெய்வீகமானது, புனிதமானது. உங்களுடையதும் அப்படியே ! (மைமைவாம்ஸோ ஜீவ லோகே ஜீவபூத ஸனாதன:)'' என்கிறார். இந்தக் கொள்கையை உண்மையில் நீங்கள் கடைப்பிடித்தால், நீங்கள் தானாகவே, தூய்மையைப் பெற்று விடுவீர்கள். தூய்மை எங்கு இருக்கிறதோ அங்கு தெய்வீகமும் இருக்கிறது.யுக யுகமாக, நீங்கள் ஒவ்வொருவரும் என்னுடைய அங்கங்களாகவே இருக்கிறீர்கள். நீங்கள் என்னுடையவர்களே.இந்த உண்மையை ஒருபோதும் மறக்காதீர்கள்.இந்த சத்தியத்தில் நீங்கள் நம்பிக்கை வைப்பது, அனைத்து சாஸ்திரங்களையும் படிப்பதற்கு ஒப்பாகும். ஒவ்வொரு மனிதனும் தர்மத்தையே கடைப்பிடிக்கிறான்.இந்த தர்மம் எங்கிருந்து வந்தது? அது, நம்பிக்கையிலிருந்து (விஸ்வாஸ்) எழும் உணர்விலிருந்து(பாவ) வருகிறது. நம்பிக்கை எங்கு இருக்கிறதோ அங்கு தர்மம் இருக்கிறது!அந்த நம்பிக்கையே சத்யம்.தர்மம் தெய்வ ஸ்வரூபமே. சத்யமே கடவுள்;நம்பிக்கையே கடவுள், அன்பே கடவுள். அன்பில் வாழுங்கள்.சத்யம்,நம்பிக்கை மற்றும் ப்ரேமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே, நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.
இந்த உலகில் ப்ரேமையை விட சிறந்த பண்பு எதுவுமில்லை.அதுவே ஞானம்;அதுவே தர்மம்;அதுவே தனம்; அதுவே சத்யம் - பாபா