azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Today many parents, even those highly educated, are acting without any sense of discrimination – discouraging children from worshipping God and participating in bhajans. They tell them that they would have ample time to think of God, post retirement. This is a grave mistake. You can remember God in old age, only when you practice thinking of Him from early on. Childhood is a very sacred and golden phase in human life - do not misuse it!Gayatri Mantrais the embodiment of Mother Principle. Practice chanting it every day – in the morning, afternoon and evening. When your back is towards the Sun, your shadow will be in front of you. It will fall behind you only when you stand facing the Sun. Similarly illusion (maya), which is like your shadow, will overpower you when you turn your mind away from God. You can easily overcome illusion, when you turn your mind towards God. (My Dear Students, Vol 2, Ch 19, Feb 10, 2000.)
Prayer alone makes life happy, harmonious and worth living in this Universe. - Baba
இன்று, மெத்தப் படித்த பல பெற்றோர்கள் கூட,பகுத்தறிவு இன்றி நடந்து கொள்கிறார்கள் -குழந்தைகளை இறைவனைத் தொழுவது மற்றும் பஜனைகளில் கலந்து கொள்வது ஆகியவற்றிலிருந்து தடுக்கிறார்கள்.ஓய்வு பெற்ற பிறகு, இறைவனைப் பற்றிச் சிந்திப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும் என்று அவர்களுக்குக் கூறுகிறார்கள்.இது மிகப் பெரிய தவறு. நீங்கள் சிறு வயதிலிருந்தே இறைவனைப் பற்றி சிந்தித்து வந்தால் தான், முதிய வயதில் அவனை எண்ண முடியும்.குழந்தைப் பருவம், மனித வாழ்க்கையின் ஒரு புனிதமான, பொன்னான பருவம் - அதைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். உலக அன்னை தத்துவத்தின் உருவகம் காயத்ரி மந்திரம்.அதை தினமும் உச்சாடனம் செய்யுங்கள் - காலை, மதியம் மற்றும் மாலையில். உங்கள் முதுகு சூரியனை நோக்கி இருக்கும் போது, உங்களது நிழல் உங்கள் முன்னால் இருக்கும். அது , நீங்கள் சூரியனை நோக்கி இருக்கும் போது தான் உங்கள் பின் பக்கம் விழும். அதைப் போலவே,உங்களது நிழலைப் போன்ற மாயையானது, நீங்கள் உங்கள் மனதை இறைவனிடமிருந்து திருப்பி விடும்போது, உங்களை ஆட்கொண்டு விடும். நீங்கள் உங்கள் மனதை இறைவனை நோக்கித் திருப்பினீர்களானால், மாயையை எளிதாக வென்றிடலாம்.
பிரார்த்தனை மட்டுமே, இந்த பிரபஞ்சத்தில் உங்கள் வாழ்க்கையை இனிமையானதாக, இசைவானதாக மற்றும் தகுந்ததாகச் செய்யும் - பாபா