azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The body is made up of five elements and is not real at any time. Body is like a water bubble. The bubble is born in water, sustained in water and ultimately merges in the water. Similarly the Self is born from Divine Consciousness(Satchidananda)and merges ultimately in the Divine. Birth and death are scenes in this drama of life; do not consider them to be true. In your sleep you may have seen many mansions, but when you are awake, you don't see any of them! The buildings you see during your day are not visible to you when you are asleep. Hence both are untrue – day-dreams and night-dreams at best! The only fact in it is that 'you' are present in both times. Similarly though you have a human form, in reality you are Divine. Therefore sanctify this birth by leading a pure and sacred life. Don't accumulate the dirt of worldly life.(My Dear Students, Vol 3, Ch 17, 'Sri Adi Shankaracharya: His Message.')
Virtue is the salt of life; Love is the highest virtue. Develop love by sharing it. - Baba
இந்த உடல் பஞ்சபூதங்களால் ஆனது;எந்த ஒரு நேரத்திலும் உண்மையானதல்ல.உடல் நீர்க்குமிழைப் போன்றது. நீர்க்குமிழ் நீரில் உருவாகின்றது; நீரிலேயே மிதக்கின்றது,இறுதியில் நீரிலேயே கலந்து விடுகிறது. அதைப் போலவே, ஆத்மாவும் ஸச்சிதானந்தமான பரமாத்மாவிலிருந்து தோன்றி , இறுதியில் தெய்வீகத்தில் ஸங்கமம் ஆகி விடுகிறது. பிறப்பும், இறப்பும் வாழ்க்கை என்ற நாடகத்தின் காட்சிகளே; அவற்றை உண்மை எனக் கருதி விடாதீர்கள். உங்களது தூக்கத்தில்( கனவில்) பல மாளிகைகளை நீங்கள் காணலாம்; ஆனால் நீங்கள் விழித்தபிறகு, நீங்கள் அவற்றில் எதையும் காண்பதில்லை ! ஒரு நாளில் ( விழிப்பு நிலையில்) நீங்கள் காணம் எந்தக் கட்டிடமும் நீங்கள் உறங்கும் போது தென்படுவதில்லை. எனவே, இரண்டுமே உண்மையல்ல- அதிக பட்சம் பகற்கனவு மற்றும் இரவுக்கனவு என்று வேண்டுமானால் கூறலாம் ! இந்த இரண்டு காலங்களிலும் ''நீங்கள் '' இருக்கிறீர்கள் என்பது மட்டுமே உண்மை. அதைப் போலவே, நீங்கள் மனித உருவில் இருந்தாலும், உண்மையில் நீங்கள் தெய்வமே. எனவே, தூய்மையான மற்றும் புனிதமான வாழ்க்கை நடத்தி இந்தப் பிறவியை புனிதமாக்குங்கள்.உலக வாழ்க்கையின் குப்பைகளைத் திரட்டி வைத்துக் கொள்ளாதீர்கள்.
நற்குணங்களே வாழ்க்கையின் சாரம்.ப்ரேமையே தலை சிறந்த நற்குணம். அதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் வளர்த்துக் கொள்ளுங்கள் - பாபா