azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 30 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 30 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

In the cosmic context, Nature is the mirror, God is the viewer. All that is reflected in Nature is Divine. God alone exists everywhere. The object and the image appear because of the presence of the mirror. When there is no mirror, there is no image! God’s arithmetic is different from that of human beings. When a mirror is placed before you, you have three entities – you, the mirror and your image. When you take away one from three, according to normal arithmetic, there must be two entities, because ‘3 - 1 = 2’. However in the cosmic arithmetic, there is no ‘two’ because when the mirror is removed, only ‘you’ remain! This is the mystery relating to Nature and the wonders of the Lord. The glories of the Lord are multifarious and marvelous, beyond words. (My Dear Students, Vol 3, Ch 17, ‘Sri Adi Shankaracharya: His Message.)
இந்த பிரபஞ்சத்தில் இயற்கையே கண்ணாடி, இறைவனே காண்பவன். இயற்கையில் பிரதிபலிக்கும் அனைத்தும் தெய்வீகமே.இறைவன் மட்டுமே அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். ஒரு பொருளும், அதன் பிம்பமும் தோன்றுவது கண்ணாடி இருப்பதால். எப்போது கண்ணாடி இல்லையோ, அப்போது பிம்பமும் இல்லை! இறைவனது கணக்கு, மனிதர்களின் கணக்கிலிருந்து மாறு பட்டது. உங்கள் முன் ஒரு கண்ணாடியை வைக்கும் போது, உங்களிடம் மூன்று விஷயங்கள் இருக்கின்றன- நீங்கள், கண்ணாடி, உங்களது பிம்பம்.சாதாரணக் கணக்கின்படி, மூன்றிலிருந்து ஒன்றை எடுத்து விட்டால், இரண்டு இருக்க வேண்டும் ஏனெனில் 3-1=2. ஆனால் பிரபஞ்சக் கணக்கில், ' இரண்டு ' அல்ல; ஏனெனில், கண்ணாடியை எடுத்து விட்டால், '' நீங்கள்'' மட்டுமே இருப்பீர்கள் ! இதுவே இயற்கை மற்றும் இறைவனின் அதிசயங்களின் ரகசியமாகும்.இறைவனது மகத்துவங்கள், வார்த்தைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, பல்வேறு வகையானதும், அதிசயத்தக்கதும் ஆனவை.