azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Control your desires. Cultivate love for God. That love will confer on you everything you need. There is no need for you to ask anything from God. Did Rama not give to Shabari what she needed without her asking? Did He not bless Jatayu with His Grace? Dasharatha had prayed for so long that his son should perform the last rites for him. But he did not get it, while the bird Jatayu got the privilege of a few drops of water from Rama before its death and attained liberation. Rama even performed his last rites. Mother Shabari was eagerly waiting for Lord Rama’s arrival with sweet fruits for several years. Her intense devotion to the Lord fetched its reward – God confers His Grace (anugraha) according to each one’s deservedness and it cannot be secured byagraha(force or power). (My Dear Students, Vol 3, Ch 17, 'Sri Adi Shankaracharya: His Life')
உங்கள் ஆசைகளைக் கட்டுப் படுத்துங்கள்.இறைவன் பால் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த அன்பே உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அளித்து விடும்.இறைவனிடமிருந்து நீங்கள் எதையும் வேண்டத் தேவையே இல்லை. அன்னை சபரிக்கு, ஸ்ரீராமர் அவள் கேட்காமலேயே,அவருக்குத் தேவையானதை அளிக்க வில்லையா?அவர் ஜடாயு மீது கருணையைப் பொழியவில்லையா?தசரதர் பல காலம் தன் மகன் தனது ஈமக்கடன்களைச் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து வந்தார். ஆனால் அது அவருக்குக் கிடைக்கவில்லை; அதே சமயம் பறவையான ஜடாயு ஸ்ரீராமரிடமிருந்து, தனது இறப்பிற்கு முன் ,சில துளிகள் நீரைப் பெற்று, மோக்ஷத்தை அடைந்தார்.ஸ்ரீராமர் அவரது ஈமக் கடன்களையும் கூடச் செய்தார்.அன்னை சபரி பல வருட காலம் பகவான் ஸ்ரீராமரின் வருகைக்காக, இனிய பழங்களுடன் காத்திருந்தாள்.இறைவன் பால் அவள் கொண்டிருந்த தீவிர பக்தி அதனது பரிசைப் பெற்றுத் தந்தது. இறைவன் தன் அருளை( அனுக்ரஹா), ஒவ்வொருவரது தகுதிக்கு ஏற்ப அளிக்கிறார்; அதை அதிகாரத்தாலோ அல்லது வல்லமையாலோ (அக்ரஹா ) பெற முடியாது.