azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 22 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 22 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not be elated by riches, status, authority, intelligence, etc., which you may have. Consider that they have been given to you on trust, so that you may benefit others. They are all signs of His Grace, opportunities of service, and symbols of responsibility. Never seek to exult over others' faults; deal sympathetically with the errors and mistakes of others. Seek the good in others; hear only good tidings about them; do not give ear to scandal. On the occasion of Deepavali, resolve to light the lamp ofNamasmarana and place it at your doorstep, the lips. Feed it with the oil of devotion; let steadiness be the wick. Let the lamp illumine every minute of your life. The splendour of the Name will drive away darkness from outside you as well as inside. You will spread joy and peace among all who come near you. (Divine Discourse, 19 June 1974)
Only by the light of the Divine lamp inside can you blossom as a worthwhile person. - Baba
உங்களிடம் உள்ள செல்வம்,அந்தஸ்து,அதிகாரம்,புத்தி போன்றவை குறித்து பெருமிதம் கொள்ளாதீர்கள்.இவை அனைத்தும் உங்களுக்கு, மற்றவர்களுக்கு பயனளிப்பதற்காகவே ஒரு பொறுப்பாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது என்று கருதுங்கள்.அவை அனைத்தும் இறையருளின் அறிகுறிகள், சேவை செய்வதற்கான வாய்ப்புக்கள் மற்றும் பொறுப்பின் சின்னங்கள்.மற்றவர்களின் தவறுகளைக் கண்டு,ஒரு போதும் உவகை கொள்ளாதீர்கள்; பிறரது தவறுகள் மற்றும் பிழைகளை அனுதாபத்துடன் அணுகுங்கள்.பிறரிடம் நல்லவற்றையே காணுங்கள்; அவர்களைப் பற்றிய நல்ல விஷயங்களையே கேளுங்கள்; அவதூறுகளுக்கு செவி சாய்க்காதீர்கள்.இந்த தீபாவளித் திருநாளில், இறை நாமஸ்மரணை எனும் தீபத்தை, உங்கள் உதடுகள் என்ற வாசலில் ஏற்றுங்கள். பக்தி எனும் எண்ணையை அதில் ஊற்றுங்கள்; ஸ்திரத் தன்மையே அதன் திரியாக இருக்கட்டும். இந்த தீபம் உங்களது வாழ்வின் ஒவ்வொரு தருணத்திற்கும் ஒளி ஏற்றட்டும். இறை நாமத்தின் காந்தி உங்கள் உள்ளும்,புறமும் உள்ள இருட்டை விரட்டி விடும்.உங்கள் அருகில் வரும் அனைவருக்கும் நீங்கள் சாந்தி ,சந்தோஷங்களைப் பரப்புவீர்கள்.
உள் உறையும் தெய்வீக தீபத்தின் ஒளியினால் மட்டுமே நீங்கள் பயனுள்ள மனிதராக பரிமளிக்க முடியும் - பாபா