azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Sameans Divine,aiorayimeans Mother and Baba means Father. The Name, Sai Baba means Divine Mother and Father. Sai’s descent is to achieve the supreme task of uniting the entire mankind as one family through the bond of brotherhood and to affirm and illumine the Divine (Aatmic) Reality within each and every being. The Divine takes the form asAvatarto reveal Himself as the basis for the entire Cosmos, and to instruct all to recognise the common divine heritage that binds everyone. Only when this happens can human beings work hard to rid themselves of animalistic qualities. I am the embodiment of Love; Love is My instrument. I reveal truth about Myself for, I desire that you should contemplate on this and derive joy. Also, may you be inspired to observe the disciplines laid down and progress towards the goal of Self-Realisation. Realise the Sai who shines in your hearts. (Divine Discourse, 19 June 1974.)
God descends for man’s ascent. - Baba
''ச '' என்றால் தெய்வீகம்,''ஆய் அல்லது ஆயி'' என்றால் தாய் '' பாபா '' என்றால் தந்தை.'' சாய் பாபா ''என்ற பெயருக்கு தெய்வீகத் தாய்,தந்தை என்று பொருள். சாயியின் அவதாரம் இ(ர)றங்கி வந்திருப்பது, அனைத்து மனித குலத்தையும் ஒரே குடும்பமாக, சகோதரத்துவம் மூலம் இணைத்து,ஒவ்வொரு ஜீவராசியின் உள்ளும் உறையும் தெய்வீக ஆத்ம தத்துவத்தை உறுதி செய்து ஒளியூட்டும் தலை சிறந்த பணியைச் செய்து முடிப்பதற்காகவே.இறைவன் அவதார உருவெடுத்து வருவது,இந்த பிரபஞ்சம் அனைத்திற்கும் தானே ஆதாரம் என்பதை வெளிப்படுத்துவதற்கும்,ஒவ்வொருவரையும் இணைக்கும் பொதுவான தெய்வீக பாரம்பரியத்தை அனைவரும் உணருமாறு அறிவுறுத்துவதற்காகவே.இது நடந்தால் மட்டுமே,மனிதர்கள் கடுமையாக உழைத்து தங்களை, மிருக குணங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும். நான் ப்ரேமஸ்வருபன்;ப்ரேமையே எனது ஆயுதம்.நான் என்னைப் பற்றிய உண்மையை உங்களுக்கு அறிவிக்கிறேன் ஏனெனில், நீங்கள் அதை தியானம் செய்து, ஆனந்தம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும், கொடுக்கப் பட்ட விதி முறைகளை நீங்கள் அனுசரித்து, ஆத்ம சாக்ஷாத்காரம் என்ற குறிக்கோளை நோக்கி முன்னேற உந்தப் படுவீர்களாக. உங்கள் இதயங்களில் ஒளி விட்டுப் பிரகாசிக்கும்'' சாயியை'' உணருங்கள்.
இறைவன் அவதாரமாக இற(ர)ங்கி வருவது மனிதன் உயருவதற்காகவே-பாபா