azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Krishna told Arjuna, "You are My devotee and My friend." Neither Arjuna declared himself as a devotee nor Krishna remained content with just declaring Arjuna to be His devotee. Why did Krishna say: “You are My friend?” This declaration has a profound spiritual significance. This will be clear only when we practice the spiritual life. If merely the Lord were to call Arjuna, "My friend" his ego could get inflated and he could take undue liberties with Krishna. If He were to say, "My dear, you are My devotee," he could become extremely submissive and maybe even develop fear towards the Lord. Fear should not be instilled; nor should he be encouraged to take excessive liberties. Hence the terms devotee and friend, were used by Krishna. "You are My friend. You may be free with Me up to a point. You are My devotee. So observe certain restraints. Exercise control over yourself in your devotion." (Divine Discourse at Trayee Brindavan, July 1988.)
God alone is totally selfless as friend and benefactor. - Baba
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனிடம்,'' நீ என்னுடைய பக்தனும், நண்பனும் ஆவாய்'' என்றார். அர்ஜூனன் தன்னை பக்தன் என்று கூறிக் கொள்ளவும் இல்லை, அல்லது பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜூனனைத் தனது பக்தன் என்று மட்டும் கூறியதோடு திருப்தி அடையவுமில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணர், '' நீ எனது பக்தன் '' என்று ஏன் கூறினார்?இந்தப் பறைசாற்றுதல் ஒரு ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது.நாம் ஆன்மீக வாழ்க்கையைக் கடைப்பிடித்தால் மட்டும் தான் இது விளங்கும். ஒருவேளை, பகவான், அர்ஜூனனை வெறும்,'' எனது நண்பன் '' என்று மட்டும் கூறியிருந்தால், அவனது அகந்தை பெருகி, அவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவுக்கு மீறிய சலுகைகளை எடுத்துக் கொள்ளக் கூடும். ஒருவேளை அவர், அர்ஜூனனை, '' ப்ரியமானவனே ! நீ எனது பக்தன்'' என்று மட்டும் கூறியிருந்தால், அவன் அவரிடம் மிக அதிகமான பணிவுடன் நடந்து கொள்வதோடு மட்டும் அல்லாது, இறைவன் பால் பயத்தைக் கூட வளர்த்துக் கொள்ளக் கூடும். பயத்தையும் புகுத்தக் கூடாது; அதே சமயம் அளவுக்கு மீறிய சலுகைகளை எடுத்துக் கொள்ளாமலும் இருக்க வேண்டும். எனவே தான் பக்தன் மற்றும் நண்பன் என்ற பதத்தை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பயன்படுத்தினார். '' நீ எனது நண்பன். நீ ஒரு அளவு வரை என்னிடம் சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம்.நீ எனது பக்தன். எனவே, ஒருவித நிதானத்தைக் கடைப்பிடி. உனது பக்தியில், உனக்கே நீ சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள் ''
நண்பனாக இருப்பதிலும்,உபகாரம் செய்வதிலும் இறைவன் மட்டுமே சுயநலமற்றவன் - பாபா