azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Fix your faith firmly in the Lord and not on the things of the world. When you have strong faith in the Lord, your discrimination will be perfect. You will be guided by your Conscience, which will always lead you properly. In vedantic parlance, the Conscience is called‘Chit’. God is‘Sat-Chit-Ananda’. Sat means Being, Chit means Awareness. When and where these two are combined, there is Bliss. This is the meaning of the divine name, BABA -Being AwarenessBliss Atma. All of you are aspirants of bliss. You must enjoy uninterrupted bliss. To attain thatAnanda(Bliss), you must combineSat(Being) andChit(Awareness). Without Divinity, there is no bliss or joy. Hence always think of Him, Live in His presence. (My Dear Students, Vol 2, Ch 17, 'Lessons from the Immortal Indian Epics'.)
உங்களது நம்பிக்கையை உலக விஷயங்களில் அல்லாது , உறுதியாக இறைவன் பால் வைத்திடுங்கள்.உங்களுக்கு திடமான நம்பிக்கை இறைவன் பால் இருக்கும் போது,உங்களது பகுத்தறிவு பரிபூரணமானதாக இருக்கும். உங்களை எப்போதும் சரியாக இட்டுச் செல்லும் மனச்சாக்ஷியால் நீங்கள், வழி நடத்தப் படுவீர்கள்.வேதாந்தத்த பரிபாஷையில் மனச்சாக்ஷியை '' சித்'' என்பார்கள். இறைவன் சத்-சித்-ஆனந்தமானவன். சத் என்றால் இருப்பது,சித் என்றால் உணர்வது, எங்கு, எப்போது இந்த இரண்டும் இணைகிறதோ, அங்கு ஆனந்தம் இருக்கும். இதுவே தெய்வீக நாமமான '' BABA'' என்பதன் பொருள். - Being Awareness Bliss Atma. இருப்பது உணர்வது ஆனந்தம் ஆத்மா.நீங்கள் அனைவரும் ஆனந்தத்தைத் தேடுபவர்களே.நீங்கள் தங்கு தடையற்ற பேரானந்தத்தை அனுபவிக்க வேண்டும்.ஆனந்தத்தைப் பெற, நீங்கள் ''சத்''தையும், ''சித்''தையும் இணைக்க வேண்டும்.தெய்வீகம் இன்றி சந்தோஷமோ, ஆனந்தமோ இல்லை.எனவே எப்போதும் இறைவனையே நினையுங்கள். அவன் இருக்கும் உணர்விலேயே வாழுங்கள்.