azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The base for making a pot is clay. For making a pot, the potter is the cause and the pot is the effect. The pot may break, but the clay remains as it is. Out of a permanent substance, clay, the potter makes a pot. The fate of the pot does not affect the potter. The clay in the pot too has no impact on the potter. Extending the analogy, God is the changeless Creator, who creates innumerable objects in creation, which are subject to change in name and form. A pot cannot be made without the potter and the clay; both are necessary. Similarly the Creator is the instrumental cause of creation (Nimitta Karana). The human body may perish, like the pots, but the Creator and the Elements used for creation are imperishable. The human beings, during their lifetime, have a choice - to put their body to good use or bad use.(My Dear Students, Vol 3, Ch 16, 'Sri Adi Shankaracharya: His Life'.)
We are powerless before Time but Time’s Creator and Director can be won and attained by the wise use of Time. - Baba
ஒரு பானை செய்வதற்காக அடிப்படைப் பொருள் களிமண்.பானை செய்வதற்கு குயவன் காரணம், பானை அதன் விளைவு.பானை உடையலாம் ,ஆனால் களிமண் அப்படியே தான் இருக்கும். நிரந்தரமான ஒரு பொருளான களிமண்ணிலிருந்து, குயவன் பானையைச் செய்கிறான். பானையின் விதி ,குயவனைப் பாதிப்பதில்லை.பானையில் இருக்கும் களி மண்ணும் கூட, குயவனிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இந்த உதாரணத்தை சற்று விரிவுபடுத்தினால், இறைவனே, இயற்கையில், ரூப, நாம மாற்றங்களுக்கு உட்பட்ட எண்ணிலடங்காத பொருட்களை சிருஷ்ட்டிக்கும் மாற்றமே இல்லாத படைப்பாளி ( சிருஷ்டி கர்த்தா).ஒரு பானையை, களிமண்ணும், குயவனும் இன்றி செய்ய முடியாது; இரண்டுமே தேவை தான்.அதைப்போலவே, இறைவனும், படைப்பின் காரணக் கருவி (நிமித்த காரணா). மனித உடல் பானையைப் போல அழியலாம், ஆனால் இறைவனுக்கும், படைப்பிற்குக் காரணமான பஞ்சபூதங்களுக்கும் அழிவு என்பதே இல்லை. மனிதர்களுக்கு தங்களது வாழ்நாளில், தங்களது உடலை நல்ல காரியம் செய்ய பயன்படுத்துவதா அல்லது கெட்ட காரியம் செய்ய பயன்படுத்துவதா என்று ஒரு தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
காலத்திற்கு முன்னால் நாம் திராணியற்றவர்கள்;ஆனால்,காலத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம், காலத்தை சிருஷ்ட்டித்து , இயக்கும் இறைவனை வென்று, அடைந்திடலாம் - பாபா