azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 12 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 12 Oct 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Srishti,StithiandLaya(creation, sustenance and dissolution) are the three forms of the Divine Will; you have to penetrate the inner meaning ofSrishti, by means ofKarma Yoga; you have to grasp the significance ofStithi, by means ofBhakthi Yogaand when you master theJnana Yoga, you arrive at the experience ofLaya, of manifoldness in the One.Bhakthi(devotion) makes you aware of the Lord who sustains and supports every being; it is love, which is eternal, true and blemishless. There is no one who is devoid ofbhakthi; deep down in the core, everyone has the feeling of kinship with all creatures. It is this that makes a lonely person miserable, that makes everyone likeable to someone or other. If you have no love; you are like a lamp without the flame, blind and blinding. Love of the pure type is unmixed with hate, untampered with greed.(Divine Discourse, Oct 12, 1964. )
சிருஷ்டி,ஸ்திதி மற்றும் லய (படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல்) என்ற மூன்றும் இறைவனது ஸங்கல்பத்தின் மூன்று விதங்கள்; சிருஷ்டியின் உள் அர்த்தத்தை, கர்ம யோகத்தால் புரிந்து கொள்ள வேண்டும்,ஸ்திதியின் முக்கியத்துவத்தை பக்தியோகத்தால் அறிந்து கொள்ள வேண்டும்;ஞான யோகத்தை எப்போது நீங்கள் பெறுகிறீர்களோ, ஒன்றின் பலமடங்கு அனுபவத்தை அளிக்கும் லயத்தை நீங்கள் அடைகிறீர்கள். பக்தி உங்களை ஒவ்வொரு ஜீவராசியையும் பேணிக் காக்கும் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள வைக்கிறது; அதுவே நித்ய, ஸத்ய, நிர்மலமான ப்ரேமை. பக்தியற்றவரே கிடையாது; அந்தராத்மாவில் ஒவ்வொருவரும் அனைத்து ஜீவராசிகளுடனும் ஒரு உறவு உணர்வைக் கொண்டிருக்கிறார்கள்.இதுவே தனித்து இருக்கும் ஒருவரை துன்பத்தில் ஆழ்த்துகிறது;அதுவே ஒவ்வொருவரையும், யாரோ ஒருவருக்கோ அல்லது மற்றவருக்கோ பிடித்தமானவராக ஆக்குகிறது. உங்களிடம் ப்ரேமை இல்லை என்றால், சுடரற்ற விளக்கு போல பார்வையற்று, இருண்டு, இருப்பீர்கள். தூய ப்ரேமை த்வேஷக் கலப்பற்றது, பேராசையால் பாதிக்கப் படாதது.